*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Wednesday 2 September 2009

லால்பேட்டை நகர த மு மு க சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜெ.எம்.ஏ திருமண மண்டபத்தில் இன்று 30.08.2009 நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகரத் தலைவரும்,ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினருமான ஏ.யாசிர் அரஃபாத் தலமை வகித்தார்,நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்,நகர செயளாலர் முஹம்மத் ஆஷிக் வரவேற்றார்.நிகழ்ச்சியில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன்,ஆய்வாளர் கோடீஸ்வரன்,துணை ஆய்வாளர் செந்தில் வினாயகம் மற்றும்,த மு மு க ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,தேசிய லீக், தி மு க ,ஐக்கிய ஜமாத் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.முடிவில் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் நூருல் அமீன் நன்றி கூறினார்.


































நன்றி : lalpet.com

Sunday 30 August 2009

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளர் நூர்முகமது படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் மகன் நூர்முகம்மது (32). இவர் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளராக உள்ளார்.இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனாஸ் (28) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு கூத்தாநல்லூரில் அவரது வீட்டிலிருந்து நூர்முகம்மது கடைவீதிக்கு சென்றார். அப்போது, எதிரில் வந்த அனாஸ்க்கும் இவருக்கும் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அனாஸ், மறைத்து வைத்திருந்த கத்தியால் நூர் முகம்மதுவை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிய நிலையில் நூர் முகம்மது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தகவலறிந்த கூத்தாநல்லூர் போலீசார் தப்பியோடிய அனாஸை வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்

Sunday 26 July 2009

கொழும்பு: இலங்கையின் தென் பகுதியில் இரண்டு முஸ்லீம் குழுக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒரு பள்ளி வாசல் தீவைத்து எரிக்கப்பட்டது.தென்பகுதியில் உள்ள பேருவளையில் இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது.இது நேற்று இரவு பெரும் மோதலமாக வெடித்தது. குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசல் இன்னொரு பிரிவினரால் எரிக்கப்பட்டது.அப்போது நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.பேருவளைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் காணப்படுவதால் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி :தட்ஸ்தமிழ்

Wednesday 22 July 2009

டெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நிற்க வைத்து சோதனையிட்டு அவமானப்படுத்திய அமெரிக்காவின் காண்டிடென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதற்காக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.கடந்த ஏப்ரல் 21ம் தேதி அமெரிக்கா செல்ல டெல்லி விமான நிலையம் சென்ற கலாமுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது. அவரது ஷூவையும் கழற்றச் செல்லி சோதனையிட்டுள்ளனர் அந்த நிறுவன ஊழியர்கள். இதற்கு விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புபப் படையான சிஐஎஸ்எப் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்தபோதும் கூட இந்தச் சோதனையை அமெரிக்க ஊழியர்கள் மேற்கொண்டனர்.அப்போது மத்திய படை வீரர்களை கலாம் அமைதி்ப்படுத்திவிட்டார். ஆனாலும் கலாமுக்கு நேர்ந்த அவமானம் குறித்து சிஐஎஸ்எப், விமான போக்குவரத்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்துத்துறை காண்டினென்டல் ஏர்லைன்சிடம் விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் பதில் தரவில்லை.இந் நிலையி்ல் இது குறித்து நேற்று தகவல் பரவியதையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் இறங்கின. இதையடுத்து கலாமிடம் மன்னிப்பு கேட்பதாகவும், காண்டினென்டல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்தார்.தொடர்ந்து காண்டினென்டல் நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பினார். மேலும் அப்துல் கலாமை சோதனையிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் விமான போக்குவரத்துத்துறையின் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டது.இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது விமான நிலைய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனையில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. அதையும் மீறி சோதனை நடத்தியதால், விமான சட்டத்தின் 11(ஏ) பிரிவின்கீழ் இந்த வழக்குப் பதிவானது.இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.இந் நிலையில் தனது செயலுக்கு முதலில் திமிராக பதிலளித்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது. யாராக இருந்தாலும் சோதனை நடத்துவோம் என்று நேற்று இந்த நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் தங்களது செயலுக்காக இன்று அப்துல் கலாமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது அந்த நிறுவனம். அவரை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை. விதிகளைப் பின்பற்றினோம். அவ்வளவு தான். இருந்தாலும் கலாமுக்கு இதனால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்றி: தட்ஸ்தமிழ்

Tuesday 21 July 2009

புதுடெல்லி, ஜூலை. 21-

டெல்லி விமான நிலையத்தில் சாதாரண மனிதரை போல அப்துல் கலாமிடம் சோதனை நடத்தி உள்ளனர்.

மிக முக்கிய பிரமுகர்கள் விமான நிலையத்துக்கு செல்லும்போது அவர்களிடம் சோதனை எதுவும் நடத்தமாட்டார்கள். அவர்கள் செல்வதற்கு என்றே தனிப்பாதை உண்டு. இதற்காக விதிமுறைகளும் உள்ளன.

ஆனால் இதை மீறி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் விமான ஊழியர்கள் சோதனை நடத்தி உள்ளனர். 3 மாதத்துக்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது.

அப்துல்கலாம் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந்தேதி டெல்லியில் இருந்து அமெரிக்காவில் உள்ள நீவர்க் நகருக்கு புறப்பட்டு சென்றார். “கான்டினென்டல் ஏர்லைன்ஸ்” என்ற அமெரிக்க தனியார் விமானத்தில் அவர் பயணம் செய்தார்.

இந்த விமானத்தில் அவர் ஏற சென்றபோது அந்த விமான நிறுவன ஊழியர்கள் சாதாரண பயணிகளுக்கு நடத்தும் அனைத்து சோதனைகளையும் அவருக்கும் நடத்தி உள்ளனர். விமானம் ஏற வந்தபோது அவரை விமானத்துக்கு செல்லும் நடைபாலம் அருகே வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள்.

பாதுகாப்பு ஊழியர்களிடம் அனுப்பி அவரை முழுவதுமாக சோதனை செய்ய சொன்னார்கள். அவர்கள் உடல் முழுவதையும் சோதனை செய்தனர். அவரது ஷூவை கழற்ற சொல்லி அதையும் சோதித்தனர். அதன் பிறகுதான் விமானத்தில் ஏற அனுமதித்தனர். இவ்வளவு சோதனை நடந்த போதும் அப்துல்கலாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அனைத்துக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். இது பற்றி அவர் யாரிடமும் சொல்லவும் இல்லை.

அவருக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தபோது அவர்கள் இது பற்றி புகார் கூறலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு அப்துல்கலாம் இது அந்த விமான நிறுவனத்தின் விதிமுறை என்னிடம் சோதனை நடத்தியதில் தவறு இல்லை என்று கூறிவிட்டாராம்.

இப்போது இந்த விஷயம் எப்படியோ வெளியே வந்துவிட்டது. இதையடுத்து மத்திய அரசு விமான நிலையத்திடம் விளக்கம் கேட்டு உள்ளது.

இது பற்றி அந்த விமான நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி அபர்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எங்கள் விமான நிறுவன விதிமுறைப்படி அனைத்து பயணிகளையும் சோதனையிடுவது வழக்கம். முக்கிய பிரமுகர்கள் என்பதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று எங்கள் நிறுவனத்தில் விதிகள் இல்லை. உலகம் முழுவதும் எங்கள் நிறுவனத்தில் இப்படித்தான் சோதனை நடத்துகிறோம்.

எனவே தான் அப்துல் கலாமிடமும் சோதனை நடத்தினோம். அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து மந்திரி பிரபுல்பட் டேலிடம் கேட்டபோது, “இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இது போன்ற தவறு நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்காக அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்க இருக்கிறோம்” என்றார்.

விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது “தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் முக்கிய பிரமுகர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வழிகாட்டுதல் நெறிமுறைகளை கொடுத்துள்ளோம். ஆனால் அந்த நிறுவனம் மீறி விட்டது” என்றார்.

இந்திய பிரமுகர்கள் வெளி நாடுகளில் அவமானப்படுத்தப்படுவது ஏற்கனவே பலமுறை நடந்து உள்ளது. மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கடந்த ஆண்டு மாஸ்கோ சென்றபோது அவரிடம் சோதனை நடத்தி அவமதித்தனர்.

ஆனால் இப்போது இந்திய மண்ணிலேயே இந்திய தலைவருக்கு அவமானம் நேர்ந்து இருக்கிறது.

இந்த பிரச்சினை இன்று பாராளுமன்றத்திலும், கிளப்பப்பட்டது. பாரதீய ஜனதா உறுப்பினர்கள் இந்த பிரச்சினை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மத்திய மந்திரி பிரபு பட்டேல் பதில் அளிக்கும்போது, “இப்போதுதான் இந்த விஷயம் எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்” என்றார்.
நன்றி: மாலைமலர்

சிவகாசி: இடைத் தேர்தல் போட்டியிடுவது குறித்து ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற் குழுவில் முடிவு செய்யப்படும் என்று த.மு.மு.க மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையை லோக்சபாவில் வைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.அதே போன்று பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை கண்டறிய, அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையையும் லோக்சபாவில்தாக்கல் செய்ய வேண்டும்.தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி ஆலோசனை செய்ய, மனித நேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் முதல் தேதி அன்று சென்னையில் நடைபெறுகின்றது. அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
நன்றி:தட்ஸ்தமிழ்

டெல்லி: முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் என்ற முஸ்லீம் அமைப்புக்கு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பயிற்சி முகாமை நடத்துகிறது.இதுதொடர்பான பயிற்சி முகாம், நாக்பூரில் ஜூன் 7ம் தேதி தொடங்கியது. 15 மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.பயிற்சி வகுப்பின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் கே.எஸ்.சுதர்சன் பேசுகையில், இங்கிலாந்துக்காரர்கள், முஸ்லீம்களையும், இந்துக்களையும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பிரித்து வைத்தனர். அந்த பிரிவினைவாத அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அரசியல்தான் நம்மைப் பிரித்து வைத்துள்ளது. ஆனால் கலாச்சாரம் நம்மை சேர்த்து வைக்கிறது.அன்பு, அமைதி ஆகிய தத்துவங்களை மக்களிடையே நாம் பிரசாரம் செய்ய வேண்டும். நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர்தான், கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்க் அனைத்தும் ஒன்றுதான் என்பதை இந்தியாவைச் சேர்ந்த முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் என்ற மாபெரும் மதத்தின் உயரிய தத்துவங்களை நாம் புரிந்து கொண்டு அமைதியுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும்.பார்சிகள், யூதர்கள், ஆங்கிலோ இந்தியர்கள்தான் இந்தியாவின் சிறுபான்மையினர். முஸ்லீம்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை. இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்தான் முஸ்லீம்கள்.தங்களது வழிபாட்டு முறை, மதப் பழக்கங்களை அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்களுக்கும், இந்து சகோதரர்களுக்கும் ஒரே மூதாதையர்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் காப்பாளராக தன்வீர் அகமது, தேசிய ஒருங்கிணைப்பாளர்களாக முகம்மது அப்சல், சலாபத் கான் ஆகியோரும், ஒருங்கிணைப்பு செயலாளராக கிரீஷ் ஜுயூல், மக்கள் தொடர்பாளராக உணர் இலியாசி ஆகியோர் செயல்படுவார்கள் என பயிற்சி வகுப்பின்போது அறிவிக்கப்பட்டது.
நன்றி:தட்ஸ்தமிழ்

Sunday 19 July 2009

இடுக்கி: தமிழகத்தின் கடும் எதி்ர்பபையும் மீறி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இந்தப் பணியை துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை உள்ளது. குமுளி-தேக்கடி அணை என்று அழைக்கப்படும் இந்த அணை தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால், இந்த அணை பலமிழந்துவிட்டதாக 1979ம் ஆண்டிலிருந்து கேரள அரசு புலம்ப ஆரம்பித்தது. ஆனால், மத்திய அரசுக் குழுவினர் அணையை ஆய்வு செய்தபோது அது பலமாக உள்ளது தெரியவந்தது.இருப்பினும் மத்திய நீர்வள ஆணையத்தின் ஆலோசனைப்படி பெரியாறு அணையை தமிழக அரசு ரூ.27 கோடி செலவு செய்து பலப்படுத்தியது.மேலும் அணையில் தேக்கப்படும் நீரின் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகம் திட்டமிட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்த நிலையிலும் அணை பலம் இழந்து விட்டதாகக் கூறி நீர்த் தேக்கும் அளவை உயர்த்த விடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது.இந் நிலையில் பெரியாறு அணை அருகே ரூ.300 கோடி செலவில் புதிய அணையைக் கட்டி தமிழகத்துக்கு நீரை தருவதை நிறுத்த கேரளம் திட்டம் போட்டுள்ளது.தமிழகத்தின் எதிர்பையும் நீதிமன்ற உத்தரவையும் மீறி இதற்காக தேக்கடியில் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தியது கேரளா.ஆனால், தேக்கடி வனப் பகுதியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயப் பகுதியில் அணை கட்டுவதற்கான சர்வே நடத்தும் பணிக்கு மத்திய வனத் துறை தடை விதித்தது.இருப்பினும் புதிய அணை கட்டுவதற்காக 7 கி.மீ. தூரத்துக்கு சர்வேயை நடத்தியது கேரள அரசு நடத்தியது. இதில் புதிய அணைக்கான இடம், தண்ணீர் தேங்கும் பகுதி, மூழ்கும் நிலங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.இந் நிலையில், துபாயைச் சேர்ந்த மிடில் ஈஸ்ட் சர்வே அண்ட் என்ஜினியரிங் நிறுவனத்தின் பொறியாளர்கள் கேரள நீர்ப்பாசனத் துறை செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பெரியாறு அணையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் புதிய அணை தொடர்பான ஆலோசனைகளை நடத்தினர்.இந்த சர்வே பணியையும் மேற்கொள்ள விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் பயன்படுத்தப்படவுள்ளவாம்.
நன்றி:தட்ஸ்தமிழ்

Monday 13 July 2009

ரஸூல் (ஸல்) அவர்கள் கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றின்மீது எதனையும் எழுப்படுவதையும் தடுத்துள்ளார்கள் என அவர்களின் அன்புத்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதி)
யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக ஆக்கிய காரணத்தால், அல்லாஹ் சபித்துவிட்டான் என தன்னுடைய மரண தருவாயில் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என அவர்களின் அன்பு மனைவி அன்னை ஆயிஸா அவர்கள் அறிவித்துவிட்டு, "இவ்வாறு ரஸூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கா விட்டால் அவர்களின் கப்ரும் (தரைமட்டத்தைவிட)உயர்தப்பட்டிருக்கும் "என்று கூறினார்கள் .(புகாரி)
கப்ருகள் பூசப்படுவதையும் , அதன்மீது உட்கார்வதையும் ரஸூல் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். ஜாபிர் (ரலி) முஸ்லிம்
யூத, கிறிஸ்தவர்களில் ஒரு நல்ல மனிதன் இறந்து விடும்போது அவனது கபுரின் மீது ஒரு வணங்கும் இடத்தை கட்டிக்கொள்வார்கள், நாளடைவில் அதில் சில வடிவங்களையும் அமைத்துக்கொள்வார்கள். அல்லாஹ்விடம் இவர்களே மிகக் கெட்டவர்கள். என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னை ஆயிஸா (ரலி) (புகாரி)
கப்ருகளுக்கு ஸஜ்தா செய்வாயா ?
நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு ஸஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்." அவ்வாறு நான்செய்யமாட்டேன் "என நான் பதில் கூறினேன் . அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு ஸஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள் . கைஸிம்னு சயீத் (ரலி) (அபூதாவூத்)
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை......
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை ரஸூல் (ஸல்) அவர்கள் சபித்தார்கள் .என அவர்களின் நெருங்கிய தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் . (இப்னுமாஜா) . .
தரை மட்டத்திற்குமேல் உயரமாகக் கட்டப்பட்ட எந்த கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டுவிடாதே! என்று நபி(ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள் அதே பணியைச் செய்து வர உன்னை நான் அனுப்பி வைக்கிறேன் என்று அபுல் ஹய்யாஜ் என்பவரை நோக்கி அலி (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்
யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். அபூஹுரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்
நன்றி: islam

அல்லாஹ்வுக்கு இணைவைத்தல் அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும். وَإِذْ قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيم
இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; ''என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,"" என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக) (அல்குர்அன் 31:13) ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்...... (அல்குர்அன் 4:48)
"ஷிர்க்'கில் ஈடுபடுபவர் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்தே வெளியேறியவராவார். அவர் பாவ மன்னிப்பு கோராமல் இறந்துவிட்டால் என்றென்றும் நரகில் தங்கிவிடுவார். முஸ்லிம்களிடையே இதுபோன்ற பல இணைவைப்புகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு நாம் காண்போம்.
கப்ருகளை வணங்குவது "ஷிர்க்" அகும் இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத் தேடுவது போன்ற செயல்களனைத்தும் "ஷிர்க்' ஆகும்.
ஏனெனில் இவ்வகையான செயல்கள் மார்க்கத்தில் வணக்கமாகக் கருதப்படுகிறது. அல்லாஹ் வணக்கங்களை தனக்கு மட்டுமே செய்ய வேண்டுமென திருமறையின் பல வசனங்களில் தெளிவாகக் கட்டளையிடுகிறான்.
وَقَضَى رَبُّكَ أَلا تَعْبُدُوا إِلا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلاهُمَا فَلا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلا كَرِيمًا
(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்... (அல்குர்அன் 17:23) இறைத் தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.
أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الأرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلا مَا تَذَكَّرُونَ
(துன்பத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால், அவர்களுக்கு பதில் கூறி, அவர்களுடைய துன்பங்களை நீக்கியவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா?... (அல்குர்அன் 27:62)
مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلا بِإِذْنِهِ
... அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் (எவருக்காகிலும்) யார்தான் பரிந்து பேசக் கூடும்?... (அல்குர்அன் 2:255)
قُلْ لِلَّهِ الشَّفَاعَةُ جَمِيعًا لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأرْضِ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُون
(நபியே! நீர் கூறுவீராக) சிபாரிசு அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. (அல்குர்அன் 39:44)
சிலர் உட்காரும்போதும், எழும்போதும், எதேனும் திடுக்கம் எற்பட்டாலும், துன்பத்திலும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதை வழமையாகக் கொண்டிருக்கிறார்கள்.
உதாரணமாக: "யா முஹ்ம்மத், யா அலீ, யா ஹுஸைன், யா ஜீலானி, யா ஷாதுலி, யா ரிபாயீ, யா முஹ்யித்தீன், (யா கெளஸ், யா காஜா, யா ஷாஹுல் ஹமீது, யா கரீப் நவாஸ்') என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
இதைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمَْْ
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!..... (அல்குர்அன் 7:194)
கப்ரை வணங்கும் சிலர் அதை வலம் வருகிறார்கள். அங்குள்ள தூண்களையும் சுவர்களையும் தொட்டுத் தடவுகிறார்கள். அதன் மண்ணை எடுத்து பூசிக் கொள்கிறார்கள், ஸஜ்தா செய்கிறார்கள், பணிவுடன் நிற்கிறார்கள், தங்களது தேவைகளை நிறைவேற்றக் கோருகிறார்கள். சிலர் உடல் நலத்தையும் குழந்தைப் பேற்றையும் கோருகிறார்கள். சிலர் யா ஸய்யிதீ! தூரமான ஊரிலிருந்து உங்களை நாடி வந்துள்ளேன். என்னை நிராசையாக்கி விடாதீர்கள்! என்றெல்லாம் கூறுகிறார்கள். இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
وَمَنْ أَضَلُّ مِمَّنْ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ مَنْ لا يَسْتَجِيبُ لَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَهُمْ عَنْ دُعَائِهِمْ غَافِلُون
மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)
நபி அவர்கள் கூறுகிறார்கள்: "யாரொருவர் அல்லாஹ்வையன்றி வேறொன்றை நிகராக ஆக்கி அதை பிரார்த்தித்த நிலையில் மரணிப்பாரேயானால் அவர் நரகில் நுழைவார்'' (ஸஹீஹுல் புகாரி)
சிலர் கப்ருகளுக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்கள். சிலர் நன்மையை நாடி கப்ருகள், தர்காக்களுக்குச் செல்கிறார்கள். மற்றும் சிலர் இறை நேசர்கள் இவ்வுலகில் ஆதிக்கம் செலுத்தி, உலகின் இயக்கத்தில் பங்கு கொள்கிறார்கள். அவர்களால் நன்மை தீமை அளிக்க முடியும் என்றும் நம்புகிறார்கள்.
இவர்களைக் கண்டித்து அல்லாஹ் கூறுகிறான்:
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلا كَاشِفَ لَهُ إِلا هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلا رَادَّ لِفَضْلِه ِ
அல்லாஹ் உமக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால், அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது....(அல்குர்அன் 10:107)
இவை போன்ற இணைவைப்பதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக.
நன்றி: இஸ்லாம்

Thursday 9 July 2009

நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள்.அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது.இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர்.ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.அதை விட்டு விட்டு அவர்களின் கப்ருகளின் மீது கட்டடம் கட்டி, கந்தூரி என்ற பெயரில் ஆண்டு தோறும் கல்லறைகளுக்கு விழா எடுப்பதும், அர்ச்சனையும் ஆராதனையும் செய்வதும், நேர்ச்சை என்ற பெயரில் சமாதிகளை நாடிச் சென்று முடி எடுப்பதும், காணிக்கை செலுத்துவதும், உரூஸ் என்ற பெயரில் பாட்டுக் கச்சேரியும் பரத்தையர் நாட்டியமும் நடத்தி கண்டு களிப்பதும், சந்தனக் கூடு என்ற பெயரில் சமாதிகளுக்கு சந்தனத்தில் அபிஷேகம் செய்வதும், இவைகள் யாவுமே அந்த இறை நேசர்களை கேவலப் படுத்தும் செயல்களே தவிர கண்ணியப்படுத்தும் செயல்கள் அல்ல.'எனது கப்ரைத் திரு விழா நடத்தும் இடமாக ஆக்கி விடாதீர்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்)அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்திலேயே விழா நடத்துவது கூடாது என்றிருக்க -அவ்லியாக்களின் கப்ருகளில் ஆண்டு தோறும் விழா நடத்துவது எவ்வளவு பெரிய பாவம் என்பதை உணர வேண்டும்.அவ்லியாக்களின் சமாதிகளுக்குப் பூமாலை போடுவதும், போர்வை வாங்கிப் போர்த்துவதும், உண்டியலில் காணிக்கை போடுவதும், பாவச் செயல்களில் உள்ளவை.பூமாலையாலும் போர்வையாலும் அந்தப் புனிதர்களுக்கு என்ன பிரயோஜனம்? உண்டியலில் போடும் காணிக்கையால் அந்த உத்தமர்களுக்கு என்ன பயன்? இறை நேசர்கள் பெயரால் இடைத் தரகர்கள் அல்லவா கொள்ளை அடிக்கிறார்கள்?யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக. அவர்கள் தங்கள் நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக்கி விட்டனர்.அறிவிப்பவர்: அபூஹூiரா(ரலி) ஆதாரம் :முஸ்லிம்) நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்கள் ஆக்கி விட்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்திருக்க, அவ்லியாக்களின் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்குவது எவ்வளவு பெரிய பாவம்?பெண்கள் கப்ருஸ்தான்களுக்குச் செல்வதை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள். தர்காக்களுக்குப் பெண்கள் அறவே செல்லக் கூடாது.ஏனெனில் தர்காக்களும் கப்ருஸ்தான்கள் தான்.கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தனர்.(அறிவிப்பவர்: அபூ ஹூரைரா(ரலி) ஆதாரம்:அஹ்மத், திர்மிதி)தர்காக்களுக்குச் செல்லும் பெண்கள் சபிக்கப் பட்டவர்கள். தம் குடும்பப் பெண்களை தர்காக்களுக்கு அழைத்துச் செல்லும் ஆண்கள் மாபெரும் குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.அல்லாஹ் கூறுகின்றான்:எவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் விசுவாசங்கொண்டோர்களையும், (தங்களின்) தோழர்களாக எடுத்துக்கொண்டார்களோ நிச்சயமாக அவர்கள்தான் வெற்றிபெற்ற அல்லாஹ்வின் கூட்டத்தினர்.(அல்குர் ஆன் : அல்மாயிதா 5:56)

சர்வதேசப் பிரிவு: இங்கிலாந்தின் தேசிய ஆலோசனை சபையின் தலைவர் 'செய்யித் பரஜானி' அவர்கள், 'இஸ்லாமும், முஸ்லிம்களும் ஐரோப்பா சமூகத்தை விட்டும் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளனர்' என்றார்.
கடந்த 7ம் திகதி செவ்வாயன்று தான் விடுத்த அறிக்கையில் செய்யித் பரஜான் அவர்கள், 'இன்று சியோனிஸ்டுக்கள், ஐரோப்பாவில் தீர்மானம் எடுக்கும் முக்கிய அமைப்புக்களில் ஊடுருவியுள்ளனர். மேல்நாடுகளில் இஸ்லாமிய வளர்ச்சி குறித்து பிழையான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு அச்சுறுத்தி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தற்போது ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் அடிப்படை ஐரோப்பியர். பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் அரசியல் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அங்கம் வகிப்பதை தடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், 'இன்று மேற்கத்தியம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக உளவியற் போரை தொடர இணைந்துள்ளது. முஸ்லிம்கள், ஒற்றுமையாக இயங்குவதன் மூலம் ஐரோப்பியருக்கு இஸ்லாத்தின் அடிப்படைப் போதனைகளை அறிமுகப்படுத்தவும், இஸ்லாம் குறித்து அவர்கள் கொண்டுள்ள பிழையான சிந்தனைகளைப் போக்கவும் இஸ்லாமிய ஆய்வு நிறுவனங்களை ஏற்படுத்துவது அவசியம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையின் இறுதியில், 'இங்கிலாந்திலும் கூட சியோனிஸ்டுகள், அரசியல் நிறுவனங்களில் ஊடுருவியுள்ளதுடன், தீர்மானம் எடுக்கும் பலத்தையும் பெற்றுள்ளதோடு இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்' என பரஜானி குறிப்பிட்டுள்ளார்.

Wednesday 8 July 2009

டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பத்தாவது வகுப்பு படித்து வந்த மாணவர் முகம்மது சலீம் என்பவர் தனது மத வழக்கத்தின்படி தாடி வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி பள்ளியிலிருந்து நீக்கியது.இதை எதிர்த்து முகம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 30ம் தேதி விசாரித்தது.அப்போது மார்க்கண்டேய கட்ஜூ கூறுகையில் பள்ளி, கல்லூரி விதிகளை மீற முடியாது. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போவதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான் மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.இதற்கு முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாணவர் சலீம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், நீதிபதி கட்ஜூ ஒருதலைபட்சமாக, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மார்ச் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றனர்.மேலும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அவரது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பும், வருத்தமும் கேட்டு்க கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், நீதிபதிகளில் ஒருவர் (கட்ஜூ) பாரபட்சமாக நடப்பதாக மனுதாரர் கூறியிருப்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகவும் ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
நன்றி:தட்ஸ்தமிழ்

Tuesday 7 July 2009

உரும்கி (சீனா): சீனாவின் வட மேற்கில் உள்ள உரும்கி என்ற பகுதியில், முஸ்லீம்களான உயிகுர் இனத்தவருக்கும், சீனர்களான ஹான் பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 140 பேர் உயிரிழந்தனர்.கடந்த பல ஆண்டுகளில் சீனாவில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரம் இது எனக் கூறப்படுகிறது. 800க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.ஜின்சியாங் உயுகுர் சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில், நேற்று இரவு இந்த கலவரம் நடந்தது.இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவ இடத்திலேயே 57 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்றார்.வட மேற்கு சீனாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர். இங்கு பல்வேறு முஸ்லீம் குழுக்கள் தனி நாடு கோரி போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.அவர்களது மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்தப் பிராந்தியம் மோதல்களுடன்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அது பெரும் மோதலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நன்றி: தட்ஸ்தமிழ்

Friday 3 July 2009


நெல்லை: மதுரையில் கூஜா வெடிகுண்டுகளை பதுக்கிய வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 வக்கீல்களை தேடி வருகின்றனர்.இதுகுறித்து தென்மண்டல ஜஜி சஞ்சீவ் குமார், நெல்லை டிஐஜி கண்ணப்பன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது...நெல்லை சுத்தமல்லியில் ரவுடி மதன் உள்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான 13 பேர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து கடந்த மே முதல் மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகின்றனர்.இவர்களை பழிக்கு பழியாக தீர்த்து கட்ட மதனின் கூட்டாளிகளான பாளையங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர சுப்பிரமணியன், ஏட்டு ஒருவரின் மகன் பேச்சிமுத்து, உள்ளிட்டோர் முடிவு செய்தனர்.நெல்லை மற்றும் மதுரையை சேர்ந்த 2 வக்கீல்களின் ஆலோசனைபடி மதன் கொலையாளிகளை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல திட்டமிட்டனர்.இதற்காக பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த குட்டி என்ற சண்முகசுந்தரத்திடம் கூஜா வெடிகுண்டுகளை தயாரித்து வாங்கினர்.ஒரு குண்டை வெடிக்க செய்து பரிசோதனை செய்து பார்த்தனர். மீதமுள்ள 13 கூஜா குண்டுகளை ஹரிஹர ராமசுப்பிரமணியனின் வீட்டில் பதுக்கி வைத்தனர்.இதுபற்றிய ரகசிய தகவல் கிடைக்கவே மதுரை போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதனால் கொலை திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அந்த கும்பல் 13 கூஜா குண்டுகளை அங்குள்ள பாலத்தில் அடியில் மறைத்து வைத்துவிட்டு நெல்லை திரும்பினர்.இந்நிலையில் போலீசார் கூஜா குண்டுகளை கைப்பற்றிவிட்டனர். தங்களது திட்டம் தோல்வியடைந்து விட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் கடந்த 28ம் தேதி சுத்தமல்லியில் தொழிலாளி கசமாடனை வெட்டி கொலை செய்தது.இந்நிலையில் தனி்ப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஹரிஹர சுப்பிரமணியன், முத்துகிருஷ்ணன், வெங்கடேஷ், ஜோக்கப் ஜெயசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேஷ், லெட்சுமணன், முருகன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 7 அரிவாள்கள், துப்பாக்கி தோட்டாக்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.பேட்டியின் போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள மஞ்சுநாதா, மதுரை சரக டிஐஜி பாலசுப்பிரமணியன், நெல்லை புறநகர் எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் உடன் இருந்தனர்.குண்டர் சட்டம் பாயும் - ஐஜி எச்சரிக்கைஐஜி சஞ்சீவ் குமார் தொடர்ந்து கூறுகையில், மதுரையில் கூஜா வெடிகுண்டு சிக்கியதும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் எதிர்தரப்பை கொல்ல திட்டமிட்டு நெல்லையை சேர்ந்த சிலர் கூஜா குண்டுகளை தயாரித்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேஷிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் போலீஸ் துறைக்கு சொந்தமானவையா என விசாரணை நடக்கிறது.இச்சம்பவத்தின் பிண்ணனியில் செயல்பட்ட மற்றொரு டிஸ்மிஸ் ஆன போலீஸ்காரர் வெங்கடேஷ் உள்பட 10 பேரை தீவிரமாக தேடி வருகிறோம். வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.பட்டாசு வெடிகளை பிரித்து அவற்றில் இருந்து வெடிமருந்துகளை சேர்த்து கூஜா குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில் கூஜா குண்டுகள் மூலம் ஏற்படவிருந்த உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் பழிக்கு பழி வாங்கும் வகையில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவர்கள் குண்டர் தடை சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர் என்றார்.
நன்றி :தட்ஸ்தமிழ்


ஜித்தா : ஜித்தா இந்திய‌ன் க‌ல்சுர‌ல் காங்கிர‌ஸின் சார்பில் வினாடி வினா போட்டி ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌து. இந்திய‌ன் க‌ல்சுர‌ல் காங்கிர‌ஸின் வெள்ளி விழாவினையொட்டி வினாடி வினா போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌.இவ்வினாடி வினா போட்டியினை ஜித்தா இந்திய‌ப் ப‌ள்ளியின் த‌லைமை ஆசிரிய‌ர் பால் ஜாய் ந‌ட‌த்தினார்.இப்போட்டியில் ஆசாத் அணியைச் சேர்ந்த‌ ஒம‌ர் அகீல் கான், ஹ‌ம்தான், ஷாஜ் முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ரிக்கா எலிச‌பெத் ஆகியோர் முத‌லிட‌ம் பெற்ற‌ன‌ர். நேரு அணியினைச் சேர்ந்த‌ ம‌ன்ஹ‌ர் முஸ‌பிர், முஹ‌ம்ம‌து ஃபாஸில், ஆமிர் இக்பால், உம‌ர் அப்துல் ஹ‌மீது உள்ளிட்டோர் இர‌ண்டாவ‌து இட‌த்தைப் பெற்ற‌ன‌ர்.குழ‌ந்தைக‌ள் பிரிவில் ஸ‌யான் ஜாஹிர் உசேன், தாலியா ஷ‌ரீப் ம‌ற்றும் ஜ‌மீல் ஆகியோர் வெற்றி பெற்ற‌ன‌ர்.இந்திய‌ன் க‌ல்சுர‌ல் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஷ‌ரீப் குஞ்சு போட்டியில் ப‌ங்கேற்ற‌வ‌ர்க‌ளை வ‌ர‌வேற்றுப் பேசினார். இந்திய‌ப் ப‌ள்ளி ஜித்தாவின் த‌லைவ‌ர் ச‌லாஹ் க‌ரடான் போட்டியினை துவ‌க்கி வைத்தார்.இந்திய‌ன் க‌ன்சுர‌ல் ஜென‌ர‌ல் சையித் அஹ்ம‌த் பாவா சிற‌ப்பு விருந்தின‌ராக‌க் க‌ல‌ந்து கொண்டார். அவ‌ர் போட்டி ஏற்பாட்டாள‌ர்க‌ளைப் பாராட்டினார். மாண‌வ‌ர்க‌ள‌து அறிவுத்திற‌னை ஆக்க‌பூர்வ‌ ப‌ணிக‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌கையில் இப்போட்டி ஏற்பாடு செய்திருப்ப‌த‌ற்காக‌ப் பாராட்டினார்.அத‌னைத் தொட‌ர்ந்து மாணாக்க‌ர்க‌ளின் க‌லை நிக‌ழ்ச்சி சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து.

நன்றி :முத்துப்பேட்டை இணையதளம்

பர்தா என்ற மகளிரின் கவச உடை மீண்டும் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. ஆபாசத்தை வேரறுத்து மகளிரின் கண்ணியத்தைக் கட்டிக் காக்கும் பர்தா உடைக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி இல்லை என பிரெஞ்சு அதிபர் நிகலஸ் சர்க்கோஸி தெரிவித்த கருத்து உலக அளவில் பரபரப்பு தீயை பற்றவைத்தது.
2004ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் கல்விக் கூடங்களில் கூட ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்பதே பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய முஸ்லிம்களின் கடும் அதிருப்திக்கு பிரான்ஸ் இலக்கானது. ஐரோப்பியக் கண்டத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பிரான்ஸில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து தற்போது பர்தா அணியவும் அனுமதி யில்லை என்ற பிரெஞ்சு அதிபரின் திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் ஜனநாயக ஆர்வலர்களை வேதனைப்படுத் தியுள்ளது.
பொது இடங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின்படி கல்லூரிகள் மற்றும் பொதுவிழாக்களில் ஹிஜாப் அணிய முடியாது என்பதால் இதனை எதிர்த்து பிரான்ஸின் உரிமைக் காக்கும் போராளிகள் போராடி வரும் நிலையில் பர்தாவுக்கு அனுமதி இல்லை என்ற சர்க்கோஸியின் அறிவிப்பு ஆணவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகவும், இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகத்தின் வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி மார்க்க நிறுவனமான தாருல் உலூம் தேவ்பந்த், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்க்கோஸியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் அறிவிப்பினை வெளியிடத் தயாராக இருப்பதாக தாருல் உலூம் தேவ்பந்த்தின் ஃபத்வா அறிவிப்பினை வெளியிடும் தாருல் உஃபா வின் தலைவர் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவிக் கிறார். சர்க்கோஸியின் கருத்து மனித சமூகமே வெட்கப் பட வேண்டிய கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
புர்கா, நகாப், ஹிஜாப் இவையனைத்தும் பெண்களின் ஆடைகள் குறித்த அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். சர்க்கோஸி தனது சொந்த நாட்டின் சட்டத்தையும் மீறியிருக்கிறார் எனவும் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவித்திருக்கிறார்.
சர்க்கோஸி தான் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு எதிராக வும் கூட தனது கருத்தை தெரிவித்து தனது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டியுள்ளார் என்ற முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி, 'கன்னி மரியம் முக்காடிட்டதையும் அவர் என்றும் தெரிவித்தார்.
சர்க்கோஸியின் முட்டைகோசுத்தனமான கருத்து உலககெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அடிமைத்தனத்தின் சின்னமா? உளறுகிறாரா சர்க்கோஸி? என வெகுண்டெழுந்த அறிவுஜீவிகள், உலகெங்கும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான விவாத மன்றங்களை அமைத்து மூடத்தன கருத்துக்கு தெளிவான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்க்கோஸி வெறிக் கருத்து வெளியிட்ட சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஹுஸைன் ஒபாமாவால் பிரான்ஸின் உடை விஷயத்தில் பிற் போக்குத்தனத்தை செயல்படுத்துவதை கடுமையாக விமர்சித்து தனது கருத்தினை வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களின் உடைகளின் விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப் படுகின்றன. இது தேவையற்ற ஒன்று. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் சரமாரியாகத் தாக்கினார்.
பர்தா உடை விஷயத்தில் தற்போது கருத்து தெரிவிப்பது, தடை குறித்து பேசுவது எல்லாம் இப்போது உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படும் விஷயமாகி விட்டது.
பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியத் தடை இல்லை என்ற சுதந்திர உணர்ச்சிக்கு எதிரானதாக பிரெஞ்சு அதிபரின் கருத்து அமைந் துள்ளது என உலகெங்கிலும் உள்ள நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரம் (கண்க்ஷங்ழ்ற்ஹ்), சமத்துவம் (ஊவ்ன்ஹப்ண்ற்ஹ்), சகோதரத்துவம் (எங்ழ்ற்ஹய்ண்ற்ஹ்) என்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியாகவே சர்க்கோஸின் கருத்து அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
நன்றி:த ம ம க

Thursday 2 July 2009

வாஷிங்டன்: ஈரானால் ஈராக்குக்கு ஆபத்து ஏற்படும் என பயந்த சதாம் உசேன், தன்னிடம் அபாயகரமான நாசகார ஆயுதங்கள் இருப்பதாக காட்டிக் கொண்டார். உண்மையில் ஈராக்கிடம் அப்படி எதுவும் இல்லை என்பதே உண்மை என்று அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.சதாம் உசேன் பிடிபட்ட பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இது தெரிய வந்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் சதாம் உசேனிடம் நடந்த விசாரணையின்போது இந்தத் தகவல்களை சதாம் தெரிவித்தாராம்.இந்தத் தகவல்கள் இதுவரை ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது இவற்றை எப்பிஐ வெளியிட்டுள்ளது.எதிரிகளின் கண்ணில் ஈராக் பலவீனமான நாடாக பார்க்கப்படக் கூடாது என்று விரும்பினார் சதாம். குறிப்பாக ஈரான் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என விரும்பினார்.இதனால்தான் ஈராக்கிடம் நாசகார ஆயுதங்கள் இருப்பது போல அவர் காட்டிக் கொண்டார். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை என்று சதாம் தெரிவித்தார்.ஈராக்கின் பலவீனங்களை ஈரான் கண்டுபிடித்து வருவதாக உணர்ந்த சதாம், அதிலிருந்து ஈராக்கைக் காத்துக் கொள்ள பெருமளவில் ஆயுதங்கள் இருப்பது போல காட்டிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்தாராம் சதாம்.அமெரிக்காவை விட ஈரான்தான் தனது முதன்மையான எதிரி என்று சதாம் நினைத்தார். ஆயுதங்கள் இருக்கிறதா என்பதைப் பார்வையிட ஐ.நா. குழுக்கள் வருகை தர முயன்றபோதெல்லாம் அவர் தடுத்ததற்கும் இதுவே காரணம். எங்கே குட்டு உடைந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் எந்தக் குழுவையும் ஈராக்குக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.ஈரானுக்கும், ஈராக்குக்கும் 1980ம் ஆண்டு போர் வெடித்தது. 1988ம் ஆண்டு வரை அது நீடித்தது. அந்த சமயத்தில் ஈராக் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.2003ம் ஆண்டு ஈராக் மீது ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். மக்களைக் கொல்லும் நாசகார ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறித்தான் இந்த போர் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு ஆயுதம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சதாம் உசேன் பிடிக்கப்பட்டு அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்தபோது அவரிடம் 20 முறை எப்பிஐ ஏஜென்டுகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஐந்து முறை சாதாரண முறையில் அவரிடம் பேசியுள்ளனர்.சதாமை விலை மதிக்கத்தக்க கைதி நம்பர் 1 என்று பெயரிட்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். பின்லேடனுடன் தொடர்பில்லை..இந்த விசாரணையின்போது இன்னொரு முக்கிய மான விஷயமும் அமெரிக்கர்களுக்குத் தெரிய வந்ததாம். அல் கொய்தா தலைவர் பின்லேடனுக்கும், தனக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று சதாம் உசேன் திட்டவட்டமாக தெரிவித்தாராம்.மேலும், வட கொரியாதான் தனது மிக நெருங்கிய தோழன் என்றும் சதாம் கூறியுள்ளார்.1991 பெர்சிய வளைகுடாப் போரின்போது, இஸ்ரேலிய நிலைகளை நோக்கி ஸ்கட் ஏவுகணைகளை வீசுமாறு தான்தான் உத்தரவிட்டதாகவும் சதாம் தெரிவித்தாராம். அரபு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் இஸ்ரேல்தான் என்று தான் நினைத்ததால் இவ்வாறு உத்தரவிட்டதாக சதாம் கூறினாராம்.மேலும் 1990ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சதாம் தொலைபேசியை பயன்படுத்தியதே இல்லையாம். ஆட்கள் மூலம்தான் தகவல்களை சொல்லி அனுப்புவாராம், பெறுவாராம்.2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள். ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது. இந்த உரிமையைப் பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத் தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும் எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு. இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ - உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால் -(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது. காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மைக் கைது செய்தால் அது நமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்தச் செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும். ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும். வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப் பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும். எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத் தெரியும்போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின்போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது. தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல. இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக் கண்டு தப்பியோடும்போது அவரைப் பிடித்து தாக்கக்கூடாது.நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முயற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்து வைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும். இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான். பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.

போபால்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட விஷயத்தில் ஒரு தளபதியை போல் முழு பொறுப்பு ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அதற்காக தூக்கு மேடை ஏறவும் தயாராக இருப்பதாகவும் முன்னாள் பாஜக தலைவர்களில் ஒருவரும் இப்போது பாரதீய ஜனசக்தி கட்சியின் தலைவராக இருப்பவருமான உமா பாரதி கூறியுள்ளார்.மசூதி இடிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ள லிபரான் கமிஷனால் விசாரிக்கப்பட்ட பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ் தலைவர்களில் உமா பாரதியும் ஒருவர்.இந்த அறிக்கை குறித்து பல்வேறு தொலைக்காட்சிகளில் தோன்றி கருத்துத் தெரிவித்த உமா பாரதி,அயோத்தியில் கர சேவைக்காக பாஜக தான் லட்சக்கணக்கான தொண்டர்களை அழைத்து வந்தது. இது தான் உண்மை. இதனால் மசூதி இடிக்கப்பட்டதற்காக பாஜக தலைவர்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது.அந்த இடத்தில் பூஜை நடத்தவே நாங்கள் கூடினோம். ஆனால், நரசிம்ம ராவ் அரசு திடீரென எங்களை அங்கிருந்து அகற்ற முயன்றதால் கோபமடைந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மசூதி இடிப்பில் ஈடுபட்டனர்.அவர்களை மசூதியை விட்டு இறங்குமாறு மைக்கில் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.இந்த இடிப்புக்கு நான் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டால் அதை ஏற்க நான் தயார் என்றார் உமா பாரதி.மேலும் முஸ்லீம்கள் ஓட்டுக்காக இந்த அறிக்கையை இந்த நேரத்தில் காங்கிரஸ் கேட்டு வாங்கியுள்ளது என்று கூறிய உமா பாரதியிடம், அப்படியானால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இந்த அறிக்கையை காங்கிரஸ் வாங்கியிருக்கலாமே என்று கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை.அதே போல பாபர் மசூதி இடிப்பு தன் அரசியல் வாழ்வில் ஒரு அழிக்க முடியாத கறை என்றும், அது இடிக்கப்பட்டதைப் பார்த்தபோது கண்ணி்ல் நீர் வந்துவிட்டதாகவும் அத்வானி ஏற்கனவே கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் இந்த விஷயத்துக்காக தூக்கு மேடை ஏறவும் தயார்.அயோத்தி இயக்கத்தால் தான் நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் இரண்டு இடங்களில் இருந்து 144 ஆனது, இதனால் தான் வாஜ்பாய் ஆட்சிக்கு வர முடிந்தது.மசூதி இடிப்புக்கு நான் பொறுப்பேற்கத் தயாராக இருக்கும் நான் அதே நேரத்தில் சோனியா காந்திக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். இந்திரா காந்தி கொலையை தொடர்ந்து, காங்கிரசின் தூண்டுதலால் 20,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்குக் காரணமான குற்றவாளிகள் ஒருவரைக் கூட காங்கிரஸ் கூட்டணி அரசு இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதற்கு சோனியா பொறுப்பேற்பாரா என்றார் உமா பாரதி.பாஜக ஒத்துழைப்பு கொடுத்தது...பாஜக செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில்,இந்த கமிஷன் நடத்திய விசாரணையின்போது பாஜக தலைவர்கள் ஒத்துழைப்பு தரவில்லை. அதனால்தான் அதன் அறிக்கை தாக்கலாவதில் தாமதம் ஏற்பட்டது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.இது காங்கிரசின் பொறுப்பின்மையை காட்டுகிறது. கமிஷன் நடத்திய குறுக்கு விசாரணையில் ஆஜராகி இருக்கிறார் அத்வானி. அவரிடம் மட்டும் விசாரணை ஒரு வாரத்துக்கு மேல் நடந்தது. அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் முன்பே பாஜக மீது குற்றம் கூறி சதி செய்கிறது காங்கிரஸ்.அறிக்கையில் உள்ள விவரங்களை நாடு அறிந்து கொள்ள உரிமை உள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்வதா அல்லது வேறு வழியில் இதுபற்றி பொது விவாதம் நடத்துவதா என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அதற்குரிய பதிலை அவையில் பாஜக தெரிவிக்கும்.அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவதே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும் என்பதே நாடு முழுவதும் உள்ள இந்துக்களின் பரவலான உணர்வோட்டமாக உள்ளது.பாஜகவும் அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டுவது என்பதில் தீர்மானமாக உள்ளது என்றார் ரவிசங்கர் பிரசாத்.

அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் வருகிற 04.07.2009 சனிக்கிழமை மாலை சுனனுந் நஸாயீதமிழாக்கம் வெளியீட்டு விழா சென்னை இம்பீரியல் ஃபைஸ் மஹாலில் வைத்துநடைபெறவுள்ளது. அதில் சகோதரர்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு அன்புடன்கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விளம்பரத்தை மற்ற சகோதரர்களுக்கும் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்அப்துந் நாஸிர் பாகவி+91 96001 25000ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ்சென்னை

Wednesday 1 July 2009














லீஸ்டர் இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் இயக்குனர் மனாசிர் அஹ்சனுடன் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் 'இக்ரா' ஆங்கில இஸ்லாமிய தொலைக்காடசிக்கு நேரடி ஒளிபரப்பில் தமுமுக தலைவர் பங்குகொண்டார் படத்தின் வலது நேரம் நிற்பவர் இக்ரா தொலைக்காட்சி நிறுவனர் இமாம் காசிம். இதேபோல் லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பங்குகொண்ட தமுமுக தலைவர் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

லண்டன் பி.பி.ஸி. தமிழோசை தமிழ் பிரிவு தலைவர் மணிவண்ணனுக்கு பேட்டி அளிக்கிறார் தமுமுக தலைவர் பேரா, எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
பாரீஸ் புறநகர் பகுதியான செர்ஜியில், புதிய பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவில் தமுமுக தலைவர் பங்குகொண்டார். செர்ஜி தமிழ் முஸ்லிம் சங்கத் தலைவர் தாஜுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் படத்தில் உள்ளனர்.

பிரான்ஸ் புறநகர் பகுதியான செர்ஜியில் பள்ளிவாசல் அடிக்கல் நாட்டு விழாவில் தமுமுக தலைவர் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினார். அதனை உள்ளூர் இமாம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார்.

லண்டனில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிக் ஃபோரம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பங்குகொண்டார். இதில் இலங்கைத் தமிழர் பிரச்சினை, குறிப்பாக வடகிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் பிரச்சினை குறித்துவிரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் லண்டனில் வாழும் இலங்கைத் தமிழ் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
பிரான்ஸ் குணாஸ் தவ்ஹீத் சங்க உறுப்பினர்களுடன் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் கலந்துரையாடினார்
லண்டனில்
இயங்கும் இஸ்லாமிய
அழைப்பு மையத்தின் 12வது ஆண்டு மாநாட்டில் தமுமுக தலைவர் பங்குகொண்டு உரையாற்றினார்.









இந்துவெறி பாசிச பயங்கரவாத மோடிக்கு புதிய ஆதரவாளர் கிடைத்திருக்கிறார். தொழில் வளர்ச்சியைச் சாதிக்க, மோடியை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் உபதேசித்திருக்கிறார். இவர் இந்துவெறி பா.ஜ.க.வைச் சேர்ந்தவரல்ல; மோடியின் தாராள சலுகைகளால் ஆதாயமடைந்த தரகுப் பெருமுதலாளியுமல்ல. மதச்சார்பின்மை, வகுப்புவாத எதிர்ப்பு என்றெல்லாம் வாய்ச்சவடால் அடிக்கும் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர்தான் இவர். கேரளாவின் கண்ணனூர் தொகுதியிலிருந்து சி.பி.எம்.கட்சி சார்பில் தொடர்ந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருவாளர் அப்துல்லா குட்டி என்பவர்தான், மோடிக்குக் கிடைத்துள்ள இப்புதிய ஆதரவாளர்.
கடந்த ஜனவரியில் துபாயில், இந்தியா ஊடக அரங்கம் என்ற அமைப்பின் சார்பில் நடந்த கருத்தரங்கில் பேசிய அப்துல்லா குட்டி, “தொழில் வளர்ச்சியைச் சாதித்து வரும் குஜராத் முதல்வர் மோடிக்கு முழு மதிப்பெண் தரவேண்டும். தொழில் வளர்ச்சிக்குத் தலைமை தாங்குவதில் அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். தொழில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் நம்பகமான நட்பு ரீதியான முதல்தரமான மாநிலம்தான் குஜராத். ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 25,000 கோடி அங்கு முதலீடு செய்ததில் மோடியின் பங்கு முக்கியமானது. மேலும் அவர் டாடாவின் நானோ கார் ஆலையை குறுகிய காலத்தில் நிறுவ திறமையாகச் செயல்பட்டுள்ளார். குஜராத் வழியைக் கேரளமும் பின்பற்ற வேண்டும். அதேசமயம் மோடியின் இந்துத்துவக் கொள்கையை நான் எதிர்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சி.பி.எம். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிறப்பால் முஸ்லிமுமாகிய அப்துல்லா குட்டியே இப்படி இந்துவெறி மோடிக்குப் புகழாரம் சூட்டுவதைக் கண்டு வியந்த குஜராத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவரான புருசோத்தம் ரூபலா, “கம்யூனிஸ்டுகளுக்கு இப்போது கண் திறந்துள்ளதை வரவேற்கிறேன். மோடியின் சாதனைகளை கம்யூனிஸ்டுகளும் அங்கீகரிப்பதைப் பாராட்டுகிறேன்” என்று வெளிப்படையாக அறிவித்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கேரள சி.பி.எம். கட்சி, அவரிடம் மோடியைத் துதிபாடியதைப் பற்றி விளக்கம் கோரும் நோட்டீசு அனுப்பியது. அவரோ, “நான் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. வளர்ச்சியைச் சாதிக்க கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அரசியல்வாதிகள் ஒன்றுபட வேண்டும் என்று ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடே கூறியுள்ளார். டெல்லியில் ஷீலா தீக்சித்தும், ம.பி.யில் ராமன்சிங்கும் தொடர்ந்து வெற்றி பெற்றதற்கு அவர்கள் தொழில் வளர்ச்சியைச் சாதித்தருப்பதே காரணம்” என்று விளக்கமளித்ததோடு, “பாட்டாளி வர்க்க ஆசான் ஸ்டாலின் கூட அமெரிக்கத் திறமையை கட்சி ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே!” என்றெல்லாம் உளறத் தொடங்கினார். கட்சித் தலைமையோ இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, ஓராண்டு காலத்துக்கு கட்சியிலிருந்து அவரை இடைநீக்கம் செய்தது.
கேரளத்தில், நீண்ட காலமாக காங்கிரசின் பிடியிலிருந்த கண்ணனூர் தொகுதியை சி.பி.எம். கட்சியின் கோட்டையாக மாற்றிக் காட்டிய அப்துல்லா குட்டியை, கட்சியில் நிலவும் கோஷ்டிச் சண்டையில் பகடைக் காயாக்கி விட்டது என்றும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க எந்த நியாயமும் இல்லை என்றும் சி.பி.எம் அணிகள் மட்டுமின்றி, முதலாளித்துவப் பத்திரிகைகளும் அங்கலாய்க்கின்றன. உண்மைதான். தொழில் வளர்ச்சியைச் சாதிப்பது; மாநிலத்தை முன்னேற்றுவது என்ற பெயரில் பயங்கரவாத மோடி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும், மே.வங்கத்தின் புத்ததேவ் பட்டாச்சார்யாவும், கேரளத்தின் அச்சுதானந்தனும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? தனியார்மயதாராளமயக் கொள்கைகளை விசுவாசமாக நடைமுறைப்படுத்துவதில் மோடி அரசுக்கு இடதுசாரி அரசுகள் சளைத்தவையா? உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் சூறையாடலுக்காக சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் விவசாயிகள் மீது கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டதை மறைக்கத்தான் முடியுமா?
இப்படி தனியார்மய தாராளமயச் சேவையை தமது கட்சியும் ஆட்சியும் கொள்கையாகக் கொண்டுள்ள நிலையில், அப்துல்லா குட்டி இன்னும் ஒருபடி மேலே சென்று மோடியை விஞ்சும் வகையில், உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து தொழில் வளர்ச்சியைச் சாதிக்க வேண்டும் என்று பேசிவிட்டார். மோடி பாணியில் அனைத்து ஓட்டுக் கட்சி அரசுகளும் ‘இடதுசாரி’ அரசுகளும் உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளின் சூறையாடலுக்கு விசுவாசமாகச் சேவை செய்து வரும்போது, மோடியைப் புகழ்ந்த அப்துல்லா குட்டி மீது ஏன் சி.பி.எம். கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்?

நரேந்திர மோடி
மோடி, நவீன் பட்நாயக், கருணாநிதி, ஷீலா தீக்சித் போல ‘இடதுசாரி’ அரசுகளும் தனியார்மய தாராளமயமாக்கலைத் தீவிரப்படுத்தி மாநிலத்தின் ‘தொழில் வளர்ச்சியை’ச் சாதிக்கலாம்; ஆனால் இந்துத்துவ மோடியைப் பாராட்டக்கூடாது என்பதுதான் சி.பி.எம். கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கை. இந்தப் பித்தலாட்டக் கொள்கையைப் புரிந்து கொள்ளாமல் அப்துல்லா குட்டி, மோடியை வெளிப்படையாகப் பாராட்டித் தொலைத்துவிட்டார். அதுதான் பிரச்சினை.
இப்படி அப்துல்லா குட்டி மீது நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தாங்கள் இந்துத்துவ எதிர்ப்பில் உறுதியாக இருப்பதுபோல சி.பி.எம். கட்சி காட்டிக் கொள்கிறது. ஆனால், உலகமய எதிர்ப்பு என்ற பெயரில் பா.ஜ.க.வின் தொழிற்சங்கத்தோடு கூட்டு சேர்ந்து அடையாள போராட்டங்கள் நடத்தியதிலிருந்து, இந்துவெறி பாசிச சக்திகளுக்கு அனுசரணையாகவே சி.பி.எம். கட்சி நடந்து கொள்கிறது. மோடியின் பங்காளியும் பார்ப்பனஇந்துவெறியைத் தனது சித்தாந்தமாகக் கொண்டுள்ளவருமான பார்ப்பனபாசிச ஜெயாவுடன் தேர்தல் கூட்டணி கட்டிக் கொண்டிருக்கிறது சி.பி.எம். கட்சி.
அப்துல்லா குட்டியோ சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்து சி.பி.எம்.க்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அரசியல் சித்தாந்த உறுதியற்ற இத்தகையோரை வைத்து ஓட்டுப் பொறுக்கி தேர்தல் வெற்றியைச் சாதித்து வந்த சி.பி.எம். கட்சி, இப்போது அவர்களையும் இழந்து, கண்ணனூர் தொகுதியில் மீண்டும் வெற்றிபெற என்ன செய்வது என்று புரியாமல் கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது.

Tuesday 30 June 2009




கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தி என்கிற தினசரி நாளிதழில் திரைபட விளம்பர பக்கத்தில் ராஜாதி ராஜா என்கிற பட விளம்பரத்தில் நபிகள்னா மக்கா ராஜானா பக்கா என்கிற வாசகத்துடன் வெளியானது. இதை கண்ட முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதை கேட்காமல் விட்டுவிட்டால் நாளை இதை விட மோசமான விளைவுகள் ஏற்படகூடும் என்று அஞ்சிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அப்பட இயக்குனரான ஷக்தி சிதம்பரத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்வாறு விளம்பரம் செய்வது தவறு என்று எடுத்திகூறினர். உடனே ஷக்தி சிதம்பரம் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டதுடன் மன்னிப்பு கடிதமும் எழுதிகொடுத்தார்.


டெல்லி: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் இன்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது.1992ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் குழு அமைத்தார்.பாபர் மசூதியை இடிக்க தூண்டிய காரணிகள் எவை என்பது குறித்து விசாரிக்க இந்த கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.தொடக்கத்தி்ல் 1993ம் ஆண்டு மார்ச் 16ம் தேதியன்று இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து நீட்டிப்பு கோரி வந்தது. இந்தக் குழு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. 48 முறை இந்த கமிட்டியின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டது.கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே அதிக அளவு செலவு பிடித்த கமிஷனும் இதுதான். இதுவரை ரூ. 8 கோடி அளவுக்கு இந்த கமிஷனுக்காக அரசு செலவழித்துள்ளதுஇந் நிலையில் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் தனது அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி லிபரான்.அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை.டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் வெடித்த மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். இதையடுத்து 10 நாட்களில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே நீண்ட காலமாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் என்ற பெயர் இந்த கமிட்டிக்குக் கிடைத்துள்ளது.சுமார் 400 முறை இந்தக் குழு கூடி நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கியது. அதில் பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் முதல்வர் கல்யாண் சி்ங், வினய் கத்யார், உமா பாரதி, விஎச்பி தலைவர் அசோக் சி்ங்கால், ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் ஆகியோரும் அடக்கம்.கமிஷன் கடைசி சாட்சியை 2005ம் ஆண்டு விசாரித்து முடித்தது.தாமதத்துக்கு சிலரேர் காரணம்..லிபரான்:சிலரது ஒத்துழைப்பு இல்லாமை, குறிப்பிட்ட சிலரது நடவடிக்கைகள் காரணமாகத் தான் அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானதாக கூறியுள்ள லிபரான், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.யார் அந்த குறிப்பிட்ட சிலர் என்பது குறித்தும் அவர் விளக்க மறுத்துவிட்டார்.அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்றே தெரியாத நிலையில் இந்த அறிக்கையில் காங்கிரஸ் தனது கருத்துக்களைத் திணித்துள்ளதாக வினய் கத்யார் கூறியுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், அறிக்கை தாக்கலாகவே இத்தனை காலமாகிவிட்டது. இதனால் இந்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது என்ன நடவடிக்கை எடு்க்கப் போகிறது என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நன்றி : தட்ஸ்தமிழ்.

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் நாள் முதல் அமெரிக்க படைகள் விலக்கப்பட்டு பாசறைகளுக்குத் திரும்பவுள்ளதால், ஈராக் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாக்தாத்தின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்தும், பிற நகரங்களின் பாதுகாப்பிலிருந்தும் அமெரிக்க படைகள் விலகிக் கொள்ளவுள்ளன. அங்கிருந்து அவர்கள் பாசறைகளுக்குத் திரும்பவுள்ளனர். இதையடுத்து அந்தப் படைகள் மெல்ல மெல்ல அமெரிக்கா திரும்பவுள்ளன.

இதையடுத்து தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சம் இருப்பதால் பாக்தாத் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பஸ்ரா, மொசூல் உள்ளிட்ட பிற நகரங்களும் கூட ஈராக் ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பாக்தாத்தின் சாலையோரம் வெடித்த ஒரு குண்டுக்கு 6 பேர் காயமடைந்தனர்.

அதேபோல மேற்கு பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடித்ததில், ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.

நன்றி : தட்ஸ்தமிழ்.

Monday 29 June 2009

டெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்திருப்பது இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்குப் பதில் மேலும் மோசமடையவே செய்யும் என்று எச்சரித்துள்ளார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத்.இதுகுறித்து அவர் அரசுத் தொலைக்காட்சியில் பேசுகையில், ஒபாமாவின் கருத்துக்கள் வியப்பை தருகின்றன. ஏன் எங்களது விவகாரத்தி்ல் ஒபாமா தலையிடுகிறார் என்று புரியவில்லை. மாற்றங்களை விரும்புவதாக அவர்தானே கூறி வருகிறார். பிறகு ஏன் இப்படிப் பேச வேண்டும்.ஈரானுடன் பேச்சு நடத்த தயார் என்று அவர்கள் கூறியவண்ணம் உள்ளனர். ஆனால் அப்படிக் கூறி வரும் நிலையில் ஈரானை கடுமையாக விமர்சிப்பது தேவையா. நிச்சயம் அவர்கள் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.
நன்றி : தட்ஸ்தமிழ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை: இந்தியத் திருநாட்டின் தலைநகர் டெல்லியின் மெஹரெலி பகுதியில் உள்ள 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலை இடித்துத் தள்ள முயன்ற டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளையும், டெல்லி மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கத்துடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை முற்றுகையிட்ட டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளும், காவல்துறையினரும் சிறுபான்மை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பள்ளிவாசலோடு சேர்ந்த பகுதிகளைத் தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.டெல்லியை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் செய்த இந்த அடாத செயல் மன்னிக்க முடியாதது. தேசத்தின் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் குறுகிய மனப்பான்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது.திபியாவாலி பள்ளிவாசலின் தகர்க்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டித் தரப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் உத்தரவிட்ட அரசுகள் நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வந்த பள்ளிவாசல் ஒன்றை ரயில்வேத்துறை தகர்த்து தரைமட்டமாக்கியது. இந்தியத் திருநாட்டின் தலைநகரில் இத்தகைய அடாத செயல்கள் நடப்பது வேதனைக்குரியது.இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் காங்கிரஸ் அரசு கடும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
நன்றி : த ம ம க.

பனைக்குளம்.ஜுன்.28-
மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஏழை – எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.கல்வி உதவித்தொகை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் செலவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்-புக் வழக்கும் விழா நேற்று முன்தினம் வேதாளையில் நடந்தது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் 50 ஆயிரம் ரூ. மாணவ – மாணவிகளுக்கு நலத்திட்ட, கல்வி உதவித்தொகை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், மரைக்காயர்பட்டிணம், வேதாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 100 ஏழை-எளிய மாணவ – மாணவிகள் பயன் அடைந்தனர்.கலந்து கொண்டவர்கள்
விழாவிற்கு த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் மாயுன்கபீர், மண்டபம் ஒன்றிய ரசூல்கான், வேதாளை கிளை தலைவர் சேக் ஜமாலுதீன், ஹபிபுரகுமான் உள்பட தங்கச்சிமடம், ராமேசுவரம் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினத்தந்தி

Sunday 28 June 2009

தமிழக அளவில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருகின்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.இந்த அமைப்பின் கிளைகள் தமிழகம் மட்டுமில்லாது இந்திய எல்லையைத் தாண்டி கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் பிரிட்டன் வந்துள்ள த மு மு க தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

லண்டன் த ம ம க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லீம் சகோதர்கள்


சுதந்திர இந்தியாவில் 1992 டிசம்பர் 6 ல் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. 800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு, அல்லாஹ்வின் இல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக ஆக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தினருக்கு எதிராக ஒரு கயவாளிக் கூட்டம் எப்படி இப்படிப்பட்ட அராஜகங்களை செய்ய முடிகிறது. அதற்கு எப்படி ஆளும் கட்சி முதற்கொண்டு அரசாங்கமும் ராணுவமும் அரசாங்க ஊழியர்களில் பலரும் எப்படி துணை போகிறார்கள் (அ) துணை போனார்கள்.
எந்த மனிதனுக்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிற சிலரைக் கொண்ட நிர்வாகம் இந்தியாவிற்கு தேவை என்பதை இவை காட்டுகின்றது. அதாவது காந்தியடிகள் சொன்னது போன்று ஓர் உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. உண்மையான நேர்மையான ஊழலற்ற ஓர் ஆட்சியை இஸ்லாமியர்களால் மட்டுமே தர முடியும். அது வரை பாபர் மஸ்ஜித் தகர்ப்பு போன்று இன்னும் இது போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த இப்போது இருக்கும் நிர்வாக அமைப்பு போதவே போதாது.
இடிக்கப்பட வேண்டிய வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. எத்தனையோ அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. எத்தனையோ இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூராக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கே ஆலமரம் இருக்கிறதோ அங்கெல்லாம், அது அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அங்கே நிரந்தர கோவில் கட்டப்படும், அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் இந்துக் கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பவர்கள் இந்த நாட்டின் மத சார்பற்ற தன்மையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இந்திய நாடு மத சார்பற்ற நாடா? மத சார்புள்ள நாடா? என்று கேள்வி கேட்கக் கூடிய அளவிற்கு சட்ட புத்தகத்தில் ஒரு விதமாகவும், நடைமுறையில் வேறு விதமாகவும் இருப்பது தான் நமது நாட்டின் மதசார்பற்ற தன்மை. இதற்கு சட்ட ஒழுங்கை பேணும் நீதிமன்றங்களின் வளாகமும் விதி விலக்கில்லை.
பாபரி மஸ்ஜிதின் வழக்கு கும்பகர்ணனின் உறக்கதில் இருக்கும் நிலையில், முஸ்லிம்களின் உள்ளங்களை டில்லி காவல் துறையும் டில்லி விரிவாக்கத் துறையும் இடித்து நொறுக்கி இருக்கிறது. டில்லியில் ஒரு பள்ளிவாசலை இடிக்க கனரக வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்று அந்த பள்ளியின் ஒரு பகுதியை இடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
டில்லியில் மொஹ்ருலி என்ற இடத்தில் இருக்கும் திபியாவாலி பள்ளி வாசலை இடிப்பதற்காக 22 ஜுன் 2009 மாலை 4 மணிக்கு எந்த வித முன்அறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக காவல் துறையின் துணையோடு டில்லி விரிவாக்கத் துறை அங்கே சென்றது.
வந்தவர்கள், பள்ளியின் மேற்கூறையையும் சுவரையும் மளமளவென்று இடிக்க ஆரம்பித்தார்கள், இடித்து தள்ளி விட்டார்கள்.
400 ஆண்டு கால பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறதாம். இவர்கள் சொல்வது உண்மையானால் நீதிமன்றம் தானே முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வழக்கு நீதிமன்றம் சென்றும், பள்ளி இருந்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் ஏன் இவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
ஒரு வாதத்திற்கு, அந்த பள்ளி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் கூட வழிபாட்டுத்தலங்கள் என்பது மிகவும் உணர்வுபூர்வமான இடங்களாகும், குடியிருக்கும் வீடுகளை விட வழிபாட்டுத்தலங்களை இடிப்பது என்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவர்கள் எப்படி துணிந்து வந்தார்கள்.
அங்கிருந்த பெரியவர்கள் ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு விரிவாக்கத் துறை அதிகாரிகள் எந்த பதிலும் சொல்ல வில்லை. என்ன திமிறு இருந்திருக்க வேண்டும்.
அதனால் தான் அங்கு கூடி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து எறிந்திருக்கிறார்கள். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு அதிகரித்து விட்டதால் அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இதுதான் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையாக இருந்தால், முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் எஞ்சியிருக்கிறது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலை மீட்பதற்காக தமுமுக நடத்திய போராட்டத்தை அரசாங்கம் தனது பலத்தால் தடுத்து நிறுத்தியது, இரவோடு இரவாக எப்படி இந்துக்கள் அந்த கோட்டைக்குள் சென்று அங்குள்ள கோவிலை மீட்டார்களோ அதே போன்று அறிவிக்கப்படாத பள்ளிவாசல் மீட்பு போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்தப் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.
அப்போது இந்துக்களிடம் அரசு எப்படி நடந்து கொண்டதோ, அதே போன்று முஸ்லிம்களிடம் நடந்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நமது செய்தியாளர்.
நன்றி : த ம ம க - சவுதி

இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே! எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது

மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ், JAQH அமீர் மெளலவS. கமாலுதீன் மதனி மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு, உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய வட்டியில்ல கடன், படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள்.
லண்டனின் மாநாட்டிற்கு பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்

Saturday 27 June 2009



தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்க்கழகத்தலைவர் பேராசிரியர் Dr,MH.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இலண்டன் குரைடன் மஸ்ஜித்தில் 16/06/09 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் என்னும் தலைப்பில் தமிழில் பேருரை நிகழ்த்தினார்கள்.அதில், இறைமறை,நபி மொழிகளிலிருந்து இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் எவ்வளவு மதிப்புடைய ஒன்று என்பதை சுட்டிக்காட்டி, இன்று நாம் காணும் காட்சிகள் கவலை தரும் நிலையி உள்ளதாக தனது வேதனையை வெளிப்படுத்தினார்கள்.நல்ல தலைமுறை அமைய வேண்டுமானால் குழந்தைகளின் உரிமை காக்கப்படவேண்டும் என்றார்.உரையை கேட்பதற்கு பெண்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.



உரைக்கு பின் பள்ளியின் கீழ் தளத்தில் த மு மு கவை பிரிட்டனில் கட்டமைக்கபடவேண்டியதன் அவசியத்தை தலைவர் பேராசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.






இன்ஷா அல்லாஹ் தொடரும்

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட படங்கள்



சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.


குறிப்பு : நக்கீரன் வார இதழில் காவல்துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்., இஸ்லாம் குறித்து மிக மோசமான அவதூறைச் சுமத்தியிருக் கிறார். இதற்கு தமுமுக கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. துணைப் பொது செயலாளர் ஜெ.எஸ். ரிபாஃயி அவர்கள் நக்கீரனுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார்.
நக்கீரன் 20.06.2009, தேதியிட்ட இதழின் முகப்புக்கட்டுரையான 'மகனைக் கொன்ற அப்பன், அப்பனைக் கொன்ற மகன் குற்றப்பின்னணி, என்ற கட்டுரையில் (பக்-7) காவல்துறை அதிகாரியும், இலக்கியவாதியுமான திருமதி திலகவதி யின் கருத்தை வெளியிட்டிருந்தது, திருமதி திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் கருத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகை யில் இருப்பதால் இவ்விளக்கத்தை எழுதுகிறோம்.
''குடும்பகௌரவத்தைக் காப்பாற்ற பெற்றோர்களே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல'' என்று கருத்துகூறியுள்ளார் திலகவதி.அரபு நாடுகளில் கௌரவக் கொலை கள் நடக்கின்றன என்பதற்கு அணுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக கௌரவக்கொலைகள் நடக்கின்றன என்பது அபத்தமான அவதூறு.
'சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல' என்ற நச்சுக்கருத்தை திலகவதி போன்ற நல்லிலக்கியவாதி வெளிப்படுத்துவது வேதனைக்குரியது.
இஸ்லாம் மார்க்கம் இத்தகைய கொலைகளை கொள்கையளவில் அங்கீ கரிப்பது போன்ற தோற்றத்தை திலகவதி ஏற்படுத்துகிறார்.
''இது அமைதி மார்க்கம்; இதில் எவ்விதமான நிர்பந்தமும் கிடையாது'' என்கிறது திருக்குர்ஆன். இறைக்கட்ட ளையையே நிர்பந்தப்படுத்தி ஒருவரை ஏற்கச் செய்ய இஸ்லாம் அனுமதிக்காத போது. தன்கருத்துக்கு ஒவ்வாத பிள்ளை யைக் கொல்வதற்கு எப்படி அனுமதிக்கும்?
பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகத்திற்கு முந்திய காலத்தில் அறியாமைக்கால அரபுகள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள். பெண் குழந்தை களை சாபக்கேடாகக் கருதினார்கள், இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு பெண்குழந்தைகளை இறை அருளின் அடையாளமாய் போதித்தார்கள். ''இருபெண் குழந்தை களை சிறப்பாக வளர்த்தவருக்கு சுவர்க் கம் உறுதி'' என்று நவின்றார்கள்.திருக்குர்ஆனின் 81 வது அத்தியாயத் தின் 8,9 வசனங்கள் பெண் சிசுக்கொலை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றன.
''குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களில்லை'' என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் இப்படி ஏராளமான சான்றுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
உண்மை இவ்வாறிருக்க பெற்ற பிள்ளை யைக் கொல்வது அந்த மதத்திற் குப் புதி தானது இல்லை என்ற திலகவதி யின் கருத்து வன்மையான கண்டனத்திற் குரியது.
''சொந்தப்பிள்ளையை அல்ல அநியாய மாக எந்த ஒரு மனித உயிரை எவர் கொன்றாலும் அவர் உலக மக்கள் அனை வரையும் கொன்றவர் போலாவார். ஒரு மனித உயிரை வாழவைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்'' என்று திருக்குர்ஆன் போதிக் கிறது. இத்தகையக் கட்டளைகளைக் கொண்டுள்ள மார்க்கத்தை கொலைகளை அங்கீகரிக்கும் மதமாக திலகவதி சித்தரித்துள்ளார்.
காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தனிவாழ்வில் ஒழுங்கீனமானவராக இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரும் அப்படிப்பட்டவர் களே என்று கூறமுடியுமா?
மகளின் மீது அதீதபாசம் வைத்திருந்த ஒருவர் தன் கண்முன்னால் மகள் சீரழி வதை சகிக்க முடியாமல். வெறியோடும் அறிவீனத்தோடும் செய்த கொலைக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போட்டதே முதலில் தவறு. இந்தக் கொலையை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. குற்றச் சம்பவத்தையும், அதைச் செய்தவர் களின் மதத்தையும் இணைத்துப் பார்ப்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே நடக்கிற கருத்தியல் வன் கொடுமை என்பதைச் சுட்டிக் காட்டு கிறோம். இரண்டு சம்பவங்கள் நடந் திருக்க, ஒரு சம்பவத்திற்கு மட்டும் மதத்தை முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயலா?
மஹாபாரதத்தில், 'என் உறவுகளை பதவிக்காக நான் கொல்லமாட்டேன்' என்று அர்ஜுனன் மறுக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருத்தாலும் அவர்களைக் கொலை செய்வது ஒரு ஷத்ரியனின் கடமை என்று போதிக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. இது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது.
பத்தொன்பது வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையான நடேசனைக் கொன்றுள்ளதற்கு கீதையை ஆதாரம் காட்டி தந்தையைக் கொல்வது இந்து மதத்திற்குப் புதியதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போடும் போக்கிற்கு முற்றுப் புள்ளிவைப் பது தான் சமூக ஒற்றுமைக்கு உதவும். திலகவதி தன்கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டார்கள், அவர்களை விட நாம் பெட்டர் - பி.ஜே
அஸ்ஸலாமு அலைக்கும்அன்பு சகோதரர்களே
கடந்த ஞாயிறு (21.06.09) அன்று இமயம் டி.வியில் சகோ. பி.ஜே அவர்கள் இலண்டன் நேயர்கள் ஆன்லைன் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு:

“கருத்து வேறுபாடுகள் இன்று மட்டுமல்ல, ஸஹாபாக்கள் காலத்திலேயே இருந்தது. அபூபக்கர், உமருக்கு பின் எல்லா குழப்பங்களும் இருந்தன என்றவர் உமருக்கு எதிராக அவர் மகன் கொடுத்த பத்வாக்களே நூற்றுக்கணக்கில் உள்ளன. அபூபக்கர் ஆட்சி மட்டும் தான் சரியாக இருந்தது என்றவர் அதையும் தேடி பார்த்தால் குறை தெரியும் என்றார். மேலும் நாம் அடித்து கொள்வதில்லை. ஸஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டார்கள், வெட்டி கொண்டார்கள், அந்த சமுதாயத்தை விட நம் சமுதாயத்தை அல்லாஹ் பெட்டராக வைத்திருக்கிறான்”
என்று போடு போட்டார். அது போல் அமீர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பத்து பேர் உள்ள ஜமாத்தே இஸ்லாமி எல்லாம் அதற்கு ஒரு அமீர் வைத்திருப்பான். எல்லா அமைப்புகளும் அமீரின் பேச்சை முழுமையாக பின்பற்றுகின்றன. த.த.ஜ மட்டும் தான் குரான் - ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனும் தொனியில் பேசினார்.
த.த.ஜ சொந்தங்களே, குரான் ஹதீஸூக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் ஓரே உலகளாவிய இயக்கம் எனும் அண்ணனின் வார்த்தை படி சில கேள்விகள். அதற்கு முன் நினைவூட்டலுக்கு ஒர் வாரம் முன் கேட்ட இரு கேள்விகளை மீண்டும் வைக்கிறேன் (அபஸ வதவல்லா சம்பந்தமாக)
1. குறைஷிகள் அவ்வாறு சகோதரத்துவம் ஒன்றை தவிர இஸ்லாத்தில் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்களா ? அதற்கான ஆதாரம்?
2. நபி (ஸல்) குறைஷிகள், அடிமைகள் இருவரையும் ஒன்றாக நடத்த கூடாது என்று எண்ணிணார்களா ? அதற்கான ஆதாரம்?
புதிய கேள்விகள்
3. ஸஹாபாக்களை விட நாம் பெட்டர் ஏனென்றால் நாம் அடித்து கொள்ளவில்லை என்கிறாரே அப்போது தமுமுக - ததஜ, கடையநல்லூர் த.த.ஜ - ஜாக் விவகாரம் எல்லாம் என்ன? வெட்டி கொல்ல வில்லை என்றார் அதிகாரம் கொடுக்க பெற்ற இதர நாடுகள் பாகிஸ்தான், ஆப்கன், ஈராக்கில் வெட்டி கொள்ளவில்லையா?
4.ஸஹாபாக்களிடத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இருந்தார்களே? இப்னு உமரும் உமரின் ஆட்சியை ஏற்று தானே இருந்தார்? நாம் ஒரு தலைமையின் கீழ் இருக்கிறோமோ
5.அலீ (ரலி) யும் ஆயிஷா (ரலி) யும் சண்டை போட்டு கொண்டாலும் போரில் தோற்று போன பிறகு முஃமின்களின் அன்னையை அலீ (ரலி) கண்ணியத்தோடு அனுப்பினார்களே? அவர்களும் இற்க்கும் வரை அதை நினைத்து வருந்தினார்களே? அந்த பண்பு நம்மிடம் உள்ளதா ?
6. ஸஹாபாக்களை எப்படியாவது கீழாக பேசி எதையும் சாதிக்க போவதில்லை. என் தோழர்களை ஏசாதீர்கள். உஹது அளவு தர்மம் செய்தாலும் அவர்களுக்கு ஈடாக மாட்டீர்கள் எனும் நபிமொழி மறந்து விட்டோமா?
7. அல்லாஹ்வையும் அவன் தூதரின் திருப்தியையும் தவிர அனைத்தையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), சுவன நற்செய்தி பெற்ற பிறகும் தன் அமலில் நம்பிக்கை இல்லாமல் முனாபிக் பட்டியலில் தன் பெய்ர் உள்ளதா என கேட்ட உமர்(ரலி), தான் கொடுத்த தர்மத்தின் காரணத்தால் செய்த பாவம் மட்டுமல்ல, செய்யும் பாவத்தையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என சொல்லப்பட்ட உஸ்மான் (ரலி), ஹிஜ்ரத்தின் போது உயிரே போய் விடும் அபாயம் இருந்தும் நபிக்கு பதிலாக படுத்த அலீ (ரலி), 100% சொத்தை நபியோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), சொத்து சுகங்களை இழந்து கபனிட கூட துணியின்றி ஷஹீதான முஸைப் (ரலி) இது போன்ற ஸஹாபாக்களை வரலாற்று ஓட்டத்தில் நாம் எங்குமே பார்க்க இயலாது. அப்படியிருக்க அவர்களோடு ஒப்பிடுவோதோ, அல்லது ஒரு சில தவறுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக குறை சொல்வதோ எப்படி சரியாகும்?
த.த.ஜ சொந்தங்களே பதில் சொல்லுங்கள்
அன்பு சகோதரன்ஃபெரோஸ்கான் (fiverose@gmail.com)
மேலே உள்ள மின்னஞ்சலுக்கு சகோதரர் அபூசுமையா அவர்கள் தான் கேட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் அளிக்கவில்லை இதற்கா பதில் சொல்ல போகிறார்கள் என்று அனுப்பிய ஆதங்க பதில் மின்னஞ்சல்.
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...அன்புச் சகோதரர் 'ஃபெரோஸ்கான்,
உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்!ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை!
1. கடலூர் முபாஹலா விஷயமாக குர்'ஆனிலிருந்து கேட்ட ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.
2. கடையநல்லூர் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்கு இழைத்த இடையூறு தொடர்பாக ஆதாரம் கேட்டதற்குப் பதிலில்லை.
3. திருவிதாங்கோட்டில் தௌஹீது பள்ளிவாசல் எங்குள்ளது என்பதற்கு இதுவரை பதிலில்லை.
4. உண்டியல் பணம் தொடர்பாக ஜாக்கின் மீது இட்டுக்கட்டி, காட்டிக்கொடுத்ததற்கு இதுவரை பதிலில்லை.
5. தொழுகையில் தொடை தெரியும் படியான ஆடை உடுத்து தொழுவதற்கான ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.
6. கேரள தௌஹீது ஜமாஅத்தினர்களான முஜாஹிதீன்கள் குறித்து அவதூறு பேசியதற்கு இதுவரை பதிலில்லை.
7. "தடம் புரண்டவர்கள் பட்டியல்" வைத்ததற்கு இதுவரை விளக்கம் இல்லை.
8. குர்'ஆன் மொழிபெயர்ப்பில் நபி(ஸல்) அவர்கள் கூறாத விஷயத்தை நபிகளின் மீது இட்டுக்கட்டி எழுதியதற்கு இதுவரை பதிலில்லை.
9. கத்தரில் சைபுல்லா ஹாஜாவிற்கு தாயி விசா அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்திற்கு இதுவரை பதிலில்லை.
10. சுனாமி கணக்கில் ததஜ சீருடை வாங்கியதை இணைத்தற்கு இதுவரை பதிலில்லை.
11. அன்னிய பெண்ணுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வது தொடர்பாக இதுவரை பதிலில்லை.
இப்படி எண்ணற்றவை அடுக்கிக் கொண்டே போகலாம்.
விவாத மன்னர்களாக பெயர் எடுத்துள்ள ததஜ இயக்கத்திற்குத் தங்களின் செயல்பாடுகள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்து கேட்கப்படுவதற்குப் பதில் இல்லாமல் போவது ஆச்சரியமான விஷயம்.
சகோதரர் அதிரை ஃபாரூக், சகோதரர் அபூ நூறா, சகோதரர் சாதிக், சகோதரர் அமீன், சகோதரர் குமரி முஸ்லிம் என எண்ணற்ற சகோதரர்கள் இணையத்தில் ததஜவுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், தங்கள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட போது அமைதி காப்பதன் அர்த்தம் ஏனோ?
இதே சம்பவம் ததஜ சகோதரர்கள் மற்றவர்கள் மீது கேள்வி கேட்டு, அவர்கள் அமைதியாக இருந்து விட்டால், "பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்ற சொல்லை எத்தனை முறை நாம் இவர்களிடமிருந்து கேட்கவேண்டி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
"பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்பது பூமராங்காக ததஜ சகோதரர்களுக்கே திரும்ப வந்திருப்பது இறைவன் அவர்களின் தலைக்கனம், அகங்காரத்திற்குக் கொடுத்த மிகப் பெரிய அடியாக எடுத்துக் கொள்ளலாம்.
"தூய ஏகத்துவத்துக்குச் சொந்தக்காரர்கள்" என சுயமாக பட்டம் சூட்டிக் கொண்டு பெருமை அடித்துக் கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப தங்களின் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இனிமேலாவது ததஜ சகோதரர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம்.
என் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாகி ஒதுங்கி விடுவதன் மூலம், இவர்கள் அல்லாஹ்வுக்கு அல்ல, ததஜவுக்கே தக்லீது செய்கின்றனர் என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவ்வாறு அல்ல, ததஜவினர் அல்லாஹ்வுக்கு மட்டுமே தக்லீது செய்வோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை இப்போது ததஜ சகோதரர்களுக்கு இருக்கிறது.
எனவே, சகோதரர் 'ஃபெரோஸ்கானின் கேள்விகளுக்காவது விளக்கத்தோடு வருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.