*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Tuesday 30 June 2009




கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தி என்கிற தினசரி நாளிதழில் திரைபட விளம்பர பக்கத்தில் ராஜாதி ராஜா என்கிற பட விளம்பரத்தில் நபிகள்னா மக்கா ராஜானா பக்கா என்கிற வாசகத்துடன் வெளியானது. இதை கண்ட முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதை கேட்காமல் விட்டுவிட்டால் நாளை இதை விட மோசமான விளைவுகள் ஏற்படகூடும் என்று அஞ்சிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அப்பட இயக்குனரான ஷக்தி சிதம்பரத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்வாறு விளம்பரம் செய்வது தவறு என்று எடுத்திகூறினர். உடனே ஷக்தி சிதம்பரம் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டதுடன் மன்னிப்பு கடிதமும் எழுதிகொடுத்தார்.


டெல்லி: பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் இன்று தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தது.1992ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் கல்யாண் சிங் தலைமையில் பாஜக ஆட்சியில் இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் குழு அமைத்தார்.பாபர் மசூதியை இடிக்க தூண்டிய காரணிகள் எவை என்பது குறித்து விசாரிக்க இந்த கமிஷனுக்கு உத்தரவிடப்பட்டது.தொடக்கத்தி்ல் 1993ம் ஆண்டு மார்ச் 16ம் தேதியன்று இந்த கமிஷன் தனது அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து நீட்டிப்பு கோரி வந்தது. இந்தக் குழு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. 48 முறை இந்த கமிட்டியின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டது.கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. நாட்டிலேயே அதிக அளவு செலவு பிடித்த கமிஷனும் இதுதான். இதுவரை ரூ. 8 கோடி அளவுக்கு இந்த கமிஷனுக்காக அரசு செலவழித்துள்ளதுஇந் நிலையில் இன்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் தனது அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி லிபரான்.அந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது உடனடியாகத் தெரியவில்லை.டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் வெடித்த மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாயினர். இதையடுத்து 10 நாட்களில் இந்த கமிட்டி அமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவிலேயே நீண்ட காலமாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் கமிஷன் என்ற பெயர் இந்த கமிட்டிக்குக் கிடைத்துள்ளது.சுமார் 400 முறை இந்தக் குழு கூடி நூற்றுக்கணக்கானோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை வாங்கியது. அதில் பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் முதல்வர் கல்யாண் சி்ங், வினய் கத்யார், உமா பாரதி, விஎச்பி தலைவர் அசோக் சி்ங்கால், ஆர்எஸ்எஸ் தலைவர் சுதர்சன் ஆகியோரும் அடக்கம்.கமிஷன் கடைசி சாட்சியை 2005ம் ஆண்டு விசாரித்து முடித்தது.தாமதத்துக்கு சிலரேர் காரணம்..லிபரான்:சிலரது ஒத்துழைப்பு இல்லாமை, குறிப்பிட்ட சிலரது நடவடிக்கைகள் காரணமாகத் தான் அறிக்கை தாக்கல் செய்ய தாமதமானதாக கூறியுள்ள லிபரான், அதில் கூறப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார்.யார் அந்த குறிப்பிட்ட சிலர் என்பது குறித்தும் அவர் விளக்க மறுத்துவிட்டார்.அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்றே தெரியாத நிலையில் இந்த அறிக்கையில் காங்கிரஸ் தனது கருத்துக்களைத் திணித்துள்ளதாக வினய் கத்யார் கூறியுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், அறிக்கை தாக்கலாகவே இத்தனை காலமாகிவிட்டது. இதனால் இந்த அறிக்கையை உடனடியாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இதன் மீது என்ன நடவடிக்கை எடு்க்கப் போகிறது என்பதையும் மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றார்.
நன்றி : தட்ஸ்தமிழ்.

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் நாள் முதல் அமெரிக்க படைகள் விலக்கப்பட்டு பாசறைகளுக்குத் திரும்பவுள்ளதால், ஈராக் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பாக்தாத்தின் பாதுகாப்புப் பொறுப்பிலிருந்தும், பிற நகரங்களின் பாதுகாப்பிலிருந்தும் அமெரிக்க படைகள் விலகிக் கொள்ளவுள்ளன. அங்கிருந்து அவர்கள் பாசறைகளுக்குத் திரும்பவுள்ளனர். இதையடுத்து அந்தப் படைகள் மெல்ல மெல்ல அமெரிக்கா திரும்பவுள்ளன.

இதையடுத்து தாக்குதல்கள் நடைபெறலாம் என்ற அச்சம் இருப்பதால் பாக்தாத் முழுவதும் பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

பஸ்ரா, மொசூல் உள்ளிட்ட பிற நகரங்களும் கூட ஈராக் ராணுவத்தினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தநிலையில், பாக்தாத்தின் சாலையோரம் வெடித்த ஒரு குண்டுக்கு 6 பேர் காயமடைந்தனர்.

அதேபோல மேற்கு பாக்தாத்தில் ஒரு கார் குண்டு வெடித்ததில், ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.

நன்றி : தட்ஸ்தமிழ்.

Monday 29 June 2009

டெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்திருப்பது இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்குப் பதில் மேலும் மோசமடையவே செய்யும் என்று எச்சரித்துள்ளார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத்.இதுகுறித்து அவர் அரசுத் தொலைக்காட்சியில் பேசுகையில், ஒபாமாவின் கருத்துக்கள் வியப்பை தருகின்றன. ஏன் எங்களது விவகாரத்தி்ல் ஒபாமா தலையிடுகிறார் என்று புரியவில்லை. மாற்றங்களை விரும்புவதாக அவர்தானே கூறி வருகிறார். பிறகு ஏன் இப்படிப் பேச வேண்டும்.ஈரானுடன் பேச்சு நடத்த தயார் என்று அவர்கள் கூறியவண்ணம் உள்ளனர். ஆனால் அப்படிக் கூறி வரும் நிலையில் ஈரானை கடுமையாக விமர்சிப்பது தேவையா. நிச்சயம் அவர்கள் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.
நன்றி : தட்ஸ்தமிழ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை: இந்தியத் திருநாட்டின் தலைநகர் டெல்லியின் மெஹரெலி பகுதியில் உள்ள 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலை இடித்துத் தள்ள முயன்ற டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளையும், டெல்லி மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கத்துடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை முற்றுகையிட்ட டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளும், காவல்துறையினரும் சிறுபான்மை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பள்ளிவாசலோடு சேர்ந்த பகுதிகளைத் தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.டெல்லியை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் செய்த இந்த அடாத செயல் மன்னிக்க முடியாதது. தேசத்தின் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் குறுகிய மனப்பான்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது.திபியாவாலி பள்ளிவாசலின் தகர்க்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டித் தரப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் உத்தரவிட்ட அரசுகள் நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வந்த பள்ளிவாசல் ஒன்றை ரயில்வேத்துறை தகர்த்து தரைமட்டமாக்கியது. இந்தியத் திருநாட்டின் தலைநகரில் இத்தகைய அடாத செயல்கள் நடப்பது வேதனைக்குரியது.இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் காங்கிரஸ் அரசு கடும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
நன்றி : த ம ம க.

பனைக்குளம்.ஜுன்.28-
மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஏழை – எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.கல்வி உதவித்தொகை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் செலவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்-புக் வழக்கும் விழா நேற்று முன்தினம் வேதாளையில் நடந்தது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் 50 ஆயிரம் ரூ. மாணவ – மாணவிகளுக்கு நலத்திட்ட, கல்வி உதவித்தொகை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், மரைக்காயர்பட்டிணம், வேதாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 100 ஏழை-எளிய மாணவ – மாணவிகள் பயன் அடைந்தனர்.கலந்து கொண்டவர்கள்
விழாவிற்கு த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் மாயுன்கபீர், மண்டபம் ஒன்றிய ரசூல்கான், வேதாளை கிளை தலைவர் சேக் ஜமாலுதீன், ஹபிபுரகுமான் உள்பட தங்கச்சிமடம், ராமேசுவரம் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினத்தந்தி

Sunday 28 June 2009

தமிழக அளவில் இரத்ததான முகாம்கள், கண்சிகிச்சை முகாம்கள், கல்விச் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், அவசர ஊர்தி அர்பணித்தல், சுனாமி நிவாரணப் பணிகள் என்று தமிழகத்தில் பரவலாக அனைத்து சமூக மக்களுக்கும் கடந்த 14 வருடங்களாக சேவை செய்து வருகின்றது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.இந்த அமைப்பின் கிளைகள் தமிழகம் மட்டுமில்லாது இந்திய எல்லையைத் தாண்டி கிழக்காசிய நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகளிலும் செயல்பட்டு வருகிறது.அந்த வகையில் பிரிட்டன் வந்துள்ள த மு மு க தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் லண்டனில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். இந்த அமைப்பின் கிளை துவக்குவது சம்மந்தமாக பல்வேறு மக்களை சந்தித்து ஆலோசனை செய்துவருகின்றார்.

லண்டன் த ம ம க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் முஸ்லீம் சகோதர்கள்


சுதந்திர இந்தியாவில் 1992 டிசம்பர் 6 ல் பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித் சங்பரிவார கும்பல்களால் இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது. 800 ஆண்டு காலம் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு, அல்லாஹ்வின் இல்லமான பாபரி மஸ்ஜித் தரைமட்டமாக ஆக்கப்பட்டு விட்டது.
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் ஒரு மதத்தினருக்கு எதிராக ஒரு கயவாளிக் கூட்டம் எப்படி இப்படிப்பட்ட அராஜகங்களை செய்ய முடிகிறது. அதற்கு எப்படி ஆளும் கட்சி முதற்கொண்டு அரசாங்கமும் ராணுவமும் அரசாங்க ஊழியர்களில் பலரும் எப்படி துணை போகிறார்கள் (அ) துணை போனார்கள்.
எந்த மனிதனுக்கும் அஞ்சாத, இறைவனுக்கு மட்டுமே அஞ்சுகிற சிலரைக் கொண்ட நிர்வாகம் இந்தியாவிற்கு தேவை என்பதை இவை காட்டுகின்றது. அதாவது காந்தியடிகள் சொன்னது போன்று ஓர் உமரின் ஆட்சி இந்தியாவிற்கு தேவைப்படுகிறது. உண்மையான நேர்மையான ஊழலற்ற ஓர் ஆட்சியை இஸ்லாமியர்களால் மட்டுமே தர முடியும். அது வரை பாபர் மஸ்ஜித் தகர்ப்பு போன்று இன்னும் இது போன்ற அராஜகங்களை தடுத்து நிறுத்த இப்போது இருக்கும் நிர்வாக அமைப்பு போதவே போதாது.
இடிக்கப்பட வேண்டிய வழிபாட்டுத் தலங்கள் இந்தியாவில் எத்தனையோ இருக்கிறது. எத்தனையோ அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. எத்தனையோ இடங்களில் போக்கு வரத்துக்கு இடையூராக கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. எங்கே ஆலமரம் இருக்கிறதோ அங்கெல்லாம், அது அரசுக்கு சொந்தமான இடமாக இருந்தாலும் அங்கே நிரந்தர கோவில் கட்டப்படும், அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாமல் கண்களை மூடிக்கொண்டிருப்பார்கள். அரசாங்க அலுவலகங்களின் சுவர்களில் இந்துக் கடவுள்களின் படங்கள் மாட்டப்பட்டிருப்பதை பார்ப்பவர்கள் இந்த நாட்டின் மத சார்பற்ற தன்மையை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இந்திய நாடு மத சார்பற்ற நாடா? மத சார்புள்ள நாடா? என்று கேள்வி கேட்கக் கூடிய அளவிற்கு சட்ட புத்தகத்தில் ஒரு விதமாகவும், நடைமுறையில் வேறு விதமாகவும் இருப்பது தான் நமது நாட்டின் மதசார்பற்ற தன்மை. இதற்கு சட்ட ஒழுங்கை பேணும் நீதிமன்றங்களின் வளாகமும் விதி விலக்கில்லை.
பாபரி மஸ்ஜிதின் வழக்கு கும்பகர்ணனின் உறக்கதில் இருக்கும் நிலையில், முஸ்லிம்களின் உள்ளங்களை டில்லி காவல் துறையும் டில்லி விரிவாக்கத் துறையும் இடித்து நொறுக்கி இருக்கிறது. டில்லியில் ஒரு பள்ளிவாசலை இடிக்க கனரக வாகனங்களை எடுத்துக் கொண்டு சென்று அந்த பள்ளியின் ஒரு பகுதியை இடித்து விட்டது தான் கொடுமையிலும் கொடுமை.
டில்லியில் மொஹ்ருலி என்ற இடத்தில் இருக்கும் திபியாவாலி பள்ளி வாசலை இடிப்பதற்காக 22 ஜுன் 2009 மாலை 4 மணிக்கு எந்த வித முன்அறிவிப்பும் இன்றி சட்டவிரோதமாக காவல் துறையின் துணையோடு டில்லி விரிவாக்கத் துறை அங்கே சென்றது.
வந்தவர்கள், பள்ளியின் மேற்கூறையையும் சுவரையும் மளமளவென்று இடிக்க ஆரம்பித்தார்கள், இடித்து தள்ளி விட்டார்கள்.
400 ஆண்டு கால பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருக்கிறதாம். இவர்கள் சொல்வது உண்மையானால் நீதிமன்றம் தானே முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே வழக்கு நீதிமன்றம் சென்றும், பள்ளி இருந்த இடத்தில் அப்படியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும் ஏன் இவர்கள் அதை இடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
ஒரு வாதத்திற்கு, அந்த பள்ளி ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தாலும் கூட வழிபாட்டுத்தலங்கள் என்பது மிகவும் உணர்வுபூர்வமான இடங்களாகும், குடியிருக்கும் வீடுகளை விட வழிபாட்டுத்தலங்களை இடிப்பது என்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். எந்த வித முன்னறிவிப்பும் இன்றி இவர்கள் எப்படி துணிந்து வந்தார்கள்.
அங்கிருந்த பெரியவர்கள் ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு விரிவாக்கத் துறை அதிகாரிகள் எந்த பதிலும் சொல்ல வில்லை. என்ன திமிறு இருந்திருக்க வேண்டும்.
அதனால் தான் அங்கு கூடி இருந்த பொது மக்கள் கற்களை எடுத்து எறிந்திருக்கிறார்கள். அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி இருக்கிறார்கள்.
மக்களின் எதிர்ப்பு அதிகரித்து விட்டதால் அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்று விட்டார்கள்.
இதுதான் அரசு அதிகாரிகளின் நடவடிக்கையாக இருந்தால், முஸ்லிம்கள் செய்ய வேண்டிய ஒரு காரியம் எஞ்சியிருக்கிறது. வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள பள்ளிவாசலை மீட்பதற்காக தமுமுக நடத்திய போராட்டத்தை அரசாங்கம் தனது பலத்தால் தடுத்து நிறுத்தியது, இரவோடு இரவாக எப்படி இந்துக்கள் அந்த கோட்டைக்குள் சென்று அங்குள்ள கோவிலை மீட்டார்களோ அதே போன்று அறிவிக்கப்படாத பள்ளிவாசல் மீட்பு போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்தப் போகிறார்கள் இன்ஷா அல்லாஹ்.
அப்போது இந்துக்களிடம் அரசு எப்படி நடந்து கொண்டதோ, அதே போன்று முஸ்லிம்களிடம் நடந்து கொள்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நமது செய்தியாளர்.
நன்றி : த ம ம க - சவுதி

இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி...ஓரிறை கொள்கை ஒன்றே! எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது

மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ், JAQH அமீர் மெளலவS. கமாலுதீன் மதனி மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு, உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை, இஸ்லாமிய வட்டியில்ல கடன், படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே! என்ற தலைப்புகளில் பேசினார்கள்.
லண்டனின் மாநாட்டிற்கு பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்

Saturday 27 June 2009



தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்க்கழகத்தலைவர் பேராசிரியர் Dr,MH.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இலண்டன் குரைடன் மஸ்ஜித்தில் 16/06/09 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் என்னும் தலைப்பில் தமிழில் பேருரை நிகழ்த்தினார்கள்.அதில், இறைமறை,நபி மொழிகளிலிருந்து இஸ்லாத்தில் குழந்தை உரிமைகள் எவ்வளவு மதிப்புடைய ஒன்று என்பதை சுட்டிக்காட்டி, இன்று நாம் காணும் காட்சிகள் கவலை தரும் நிலையி உள்ளதாக தனது வேதனையை வெளிப்படுத்தினார்கள்.நல்ல தலைமுறை அமைய வேண்டுமானால் குழந்தைகளின் உரிமை காக்கப்படவேண்டும் என்றார்.உரையை கேட்பதற்கு பெண்களும் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.



உரைக்கு பின் பள்ளியின் கீழ் தளத்தில் த மு மு கவை பிரிட்டனில் கட்டமைக்கபடவேண்டியதன் அவசியத்தை தலைவர் பேராசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.






இன்ஷா அல்லாஹ் தொடரும்

நக்கீரன் மற்றும் திலகவதி I.P.S-யின் முஸ்லிம் விரோதப் போக்கை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட படங்கள்



சென்னையில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக நக்கீரன் இதழுக்கு பேட்டியளித்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ். அவர்கள் ''இஸ்லாமியர்களுக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல'' என்று பேட்டியளித்துள்ளார். தனியொரு நபரின் செயலுக்கு முஸ்லிம்கள் அனைவரையும் இழித்துரைப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
முஸ்லிம் மத துவேசத்தை உருவாக்கத் துணிந்த காவல்துறை உயர் அதிகாரி திலகவதி ஐ.பி,எஸ்.ஐக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று (24.06.2009) மாலை 4.00 மணியளவில் சென்னை மெமோரியல் ஹால் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ். ரிஃபாய், தமுமுக மாநில மாணவரணிச் செயலாளர் ஜெயினுலாப்தீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாருன் ரசீது, தமுமுக மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைது, வட சென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ''காவல்துறையில் உயர் அதிகாரியாகவும், ஓர் எழுத்தாளராகவும் இருப்பவர் இவ்வாறு பொறுப்பற்று பேசலாமா? அமைதி மார்க்கமான இஸ்லாத்தை வன்முறை மார்க்கமாக சித்தரிப்பது மெத்தப்படித்த அதிகாரிக்கு அழகா?'' என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இத்தகைய பொறுப்பற்ற சமூக கருத்துக்கு திலகவதி ஐ.பி.எஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முஸ்லிம்களை வம்புக்கு இழுத்த நக்கீரன் பத்திரிக்கையும் வெளியிட்ட செய்தியை வாபஸ் பெற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் முடுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.


குறிப்பு : நக்கீரன் வார இதழில் காவல்துறை அதிகாரி திலகவதி ஐ.பி.எஸ்., இஸ்லாம் குறித்து மிக மோசமான அவதூறைச் சுமத்தியிருக் கிறார். இதற்கு தமுமுக கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. துணைப் பொது செயலாளர் ஜெ.எஸ். ரிபாஃயி அவர்கள் நக்கீரனுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளார்.
நக்கீரன் 20.06.2009, தேதியிட்ட இதழின் முகப்புக்கட்டுரையான 'மகனைக் கொன்ற அப்பன், அப்பனைக் கொன்ற மகன் குற்றப்பின்னணி, என்ற கட்டுரையில் (பக்-7) காவல்துறை அதிகாரியும், இலக்கியவாதியுமான திருமதி திலகவதி யின் கருத்தை வெளியிட்டிருந்தது, திருமதி திலகவதி ஐ.பி.எஸ்.ஸின் கருத்து முஸ்லிம் சமுதாயத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகை யில் இருப்பதால் இவ்விளக்கத்தை எழுதுகிறோம்.
''குடும்பகௌரவத்தைக் காப்பாற்ற பெற்றோர்களே அந்தப் பிள்ளையைக் கொன்று விடும் கௌரவக் கொலைகள் அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல'' என்று கருத்துகூறியுள்ளார் திலகவதி.அரபு நாடுகளில் கௌரவக் கொலை கள் நடக்கின்றன என்பதற்கு அணுவின் துகள் அளவும் ஆதாரம் கிடையாது. அரபுநாடுகளில் அளவுக்கதிகமாக கௌரவக்கொலைகள் நடக்கின்றன என்பது அபத்தமான அவதூறு.
'சலீம் ஒரு இஸ்லாமியர் என்பதால் அந்த மதத்திற்கு இந்தச் சம்பவம் புதிதானதும் அல்ல' என்ற நச்சுக்கருத்தை திலகவதி போன்ற நல்லிலக்கியவாதி வெளிப்படுத்துவது வேதனைக்குரியது.
இஸ்லாம் மார்க்கம் இத்தகைய கொலைகளை கொள்கையளவில் அங்கீ கரிப்பது போன்ற தோற்றத்தை திலகவதி ஏற்படுத்துகிறார்.
''இது அமைதி மார்க்கம்; இதில் எவ்விதமான நிர்பந்தமும் கிடையாது'' என்கிறது திருக்குர்ஆன். இறைக்கட்ட ளையையே நிர்பந்தப்படுத்தி ஒருவரை ஏற்கச் செய்ய இஸ்லாம் அனுமதிக்காத போது. தன்கருத்துக்கு ஒவ்வாத பிள்ளை யைக் கொல்வதற்கு எப்படி அனுமதிக்கும்?
பெண்சிசுக் கொலைகளை தடுத்து நிறுத்திய மார்க்கம் இஸ்லாம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகத்திற்கு முந்திய காலத்தில் அறியாமைக்கால அரபுகள் பெண்குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தார்கள். பெண் குழந்தை களை சாபக்கேடாகக் கருதினார்கள், இதை நபிகள் நாயகம் தடுத்து நிறுத்தியதோடு பெண்குழந்தைகளை இறை அருளின் அடையாளமாய் போதித்தார்கள். ''இருபெண் குழந்தை களை சிறப்பாக வளர்த்தவருக்கு சுவர்க் கம் உறுதி'' என்று நவின்றார்கள்.திருக்குர்ஆனின் 81 வது அத்தியாயத் தின் 8,9 வசனங்கள் பெண் சிசுக்கொலை செய்வோரைக் கடுமையாக எச்சரிக்கின்றன.
''குழந்தைகளை நேசிக்காதவர்கள் என்னைச் சேர்ந்தவர்களில்லை'' என்று நபிகள் நாயகம் நவின்றார்கள் இப்படி ஏராளமான சான்றுகளைக் கூறிக் கொண்டே போகலாம்.
உண்மை இவ்வாறிருக்க பெற்ற பிள்ளை யைக் கொல்வது அந்த மதத்திற் குப் புதி தானது இல்லை என்ற திலகவதி யின் கருத்து வன்மையான கண்டனத்திற் குரியது.
''சொந்தப்பிள்ளையை அல்ல அநியாய மாக எந்த ஒரு மனித உயிரை எவர் கொன்றாலும் அவர் உலக மக்கள் அனை வரையும் கொன்றவர் போலாவார். ஒரு மனித உயிரை வாழவைத்தவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்'' என்று திருக்குர்ஆன் போதிக் கிறது. இத்தகையக் கட்டளைகளைக் கொண்டுள்ள மார்க்கத்தை கொலைகளை அங்கீகரிக்கும் மதமாக திலகவதி சித்தரித்துள்ளார்.
காவல்துறையின் உயரதிகாரி ஒருவர் தனிவாழ்வில் ஒழுங்கீனமானவராக இருக்கிறார் என்பதற்காக ஒட்டுமொத்த காவல் துறையினரும் அப்படிப்பட்டவர் களே என்று கூறமுடியுமா?
மகளின் மீது அதீதபாசம் வைத்திருந்த ஒருவர் தன் கண்முன்னால் மகள் சீரழி வதை சகிக்க முடியாமல். வெறியோடும் அறிவீனத்தோடும் செய்த கொலைக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போட்டதே முதலில் தவறு. இந்தக் கொலையை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. குற்றச் சம்பவத்தையும், அதைச் செய்தவர் களின் மதத்தையும் இணைத்துப் பார்ப்பது முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டுமே நடக்கிற கருத்தியல் வன் கொடுமை என்பதைச் சுட்டிக் காட்டு கிறோம். இரண்டு சம்பவங்கள் நடந் திருக்க, ஒரு சம்பவத்திற்கு மட்டும் மதத்தை முடிச்சுப் போட்டுப் பார்ப்பதும் அறிவு நாணயமுள்ள செயலா?
மஹாபாரதத்தில், 'என் உறவுகளை பதவிக்காக நான் கொல்லமாட்டேன்' என்று அர்ஜுனன் மறுக்கும் போது தர்மத்தை நிலைநாட்ட உறவினர்களாக இருத்தாலும் அவர்களைக் கொலை செய்வது ஒரு ஷத்ரியனின் கடமை என்று போதிக்கிறார் கிருஷ்ணபரமாத்மா. இது பகவத் கீதையிலும் பதிவாகியுள்ளது.
பத்தொன்பது வயது விஜயகுமார் அவரது குடிகாரத் தந்தையான நடேசனைக் கொன்றுள்ளதற்கு கீதையை ஆதாரம் காட்டி தந்தையைக் கொல்வது இந்து மதத்திற்குப் புதியதல்ல என்று திலகவதி கூறுவாரா? குற்றங்களுக்கும் மதத்திற்கும் முடிச்சுப் போடும் போக்கிற்கு முற்றுப் புள்ளிவைப் பது தான் சமூக ஒற்றுமைக்கு உதவும். திலகவதி தன்கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டார்கள், அவர்களை விட நாம் பெட்டர் - பி.ஜே
அஸ்ஸலாமு அலைக்கும்அன்பு சகோதரர்களே
கடந்த ஞாயிறு (21.06.09) அன்று இமயம் டி.வியில் சகோ. பி.ஜே அவர்கள் இலண்டன் நேயர்கள் ஆன்லைன் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு:

“கருத்து வேறுபாடுகள் இன்று மட்டுமல்ல, ஸஹாபாக்கள் காலத்திலேயே இருந்தது. அபூபக்கர், உமருக்கு பின் எல்லா குழப்பங்களும் இருந்தன என்றவர் உமருக்கு எதிராக அவர் மகன் கொடுத்த பத்வாக்களே நூற்றுக்கணக்கில் உள்ளன. அபூபக்கர் ஆட்சி மட்டும் தான் சரியாக இருந்தது என்றவர் அதையும் தேடி பார்த்தால் குறை தெரியும் என்றார். மேலும் நாம் அடித்து கொள்வதில்லை. ஸஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டார்கள், வெட்டி கொண்டார்கள், அந்த சமுதாயத்தை விட நம் சமுதாயத்தை அல்லாஹ் பெட்டராக வைத்திருக்கிறான்”
என்று போடு போட்டார். அது போல் அமீர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பத்து பேர் உள்ள ஜமாத்தே இஸ்லாமி எல்லாம் அதற்கு ஒரு அமீர் வைத்திருப்பான். எல்லா அமைப்புகளும் அமீரின் பேச்சை முழுமையாக பின்பற்றுகின்றன. த.த.ஜ மட்டும் தான் குரான் - ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனும் தொனியில் பேசினார்.
த.த.ஜ சொந்தங்களே, குரான் ஹதீஸூக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் ஓரே உலகளாவிய இயக்கம் எனும் அண்ணனின் வார்த்தை படி சில கேள்விகள். அதற்கு முன் நினைவூட்டலுக்கு ஒர் வாரம் முன் கேட்ட இரு கேள்விகளை மீண்டும் வைக்கிறேன் (அபஸ வதவல்லா சம்பந்தமாக)
1. குறைஷிகள் அவ்வாறு சகோதரத்துவம் ஒன்றை தவிர இஸ்லாத்தில் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்களா ? அதற்கான ஆதாரம்?
2. நபி (ஸல்) குறைஷிகள், அடிமைகள் இருவரையும் ஒன்றாக நடத்த கூடாது என்று எண்ணிணார்களா ? அதற்கான ஆதாரம்?
புதிய கேள்விகள்
3. ஸஹாபாக்களை விட நாம் பெட்டர் ஏனென்றால் நாம் அடித்து கொள்ளவில்லை என்கிறாரே அப்போது தமுமுக - ததஜ, கடையநல்லூர் த.த.ஜ - ஜாக் விவகாரம் எல்லாம் என்ன? வெட்டி கொல்ல வில்லை என்றார் அதிகாரம் கொடுக்க பெற்ற இதர நாடுகள் பாகிஸ்தான், ஆப்கன், ஈராக்கில் வெட்டி கொள்ளவில்லையா?
4.ஸஹாபாக்களிடத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இருந்தார்களே? இப்னு உமரும் உமரின் ஆட்சியை ஏற்று தானே இருந்தார்? நாம் ஒரு தலைமையின் கீழ் இருக்கிறோமோ
5.அலீ (ரலி) யும் ஆயிஷா (ரலி) யும் சண்டை போட்டு கொண்டாலும் போரில் தோற்று போன பிறகு முஃமின்களின் அன்னையை அலீ (ரலி) கண்ணியத்தோடு அனுப்பினார்களே? அவர்களும் இற்க்கும் வரை அதை நினைத்து வருந்தினார்களே? அந்த பண்பு நம்மிடம் உள்ளதா ?
6. ஸஹாபாக்களை எப்படியாவது கீழாக பேசி எதையும் சாதிக்க போவதில்லை. என் தோழர்களை ஏசாதீர்கள். உஹது அளவு தர்மம் செய்தாலும் அவர்களுக்கு ஈடாக மாட்டீர்கள் எனும் நபிமொழி மறந்து விட்டோமா?
7. அல்லாஹ்வையும் அவன் தூதரின் திருப்தியையும் தவிர அனைத்தையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), சுவன நற்செய்தி பெற்ற பிறகும் தன் அமலில் நம்பிக்கை இல்லாமல் முனாபிக் பட்டியலில் தன் பெய்ர் உள்ளதா என கேட்ட உமர்(ரலி), தான் கொடுத்த தர்மத்தின் காரணத்தால் செய்த பாவம் மட்டுமல்ல, செய்யும் பாவத்தையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என சொல்லப்பட்ட உஸ்மான் (ரலி), ஹிஜ்ரத்தின் போது உயிரே போய் விடும் அபாயம் இருந்தும் நபிக்கு பதிலாக படுத்த அலீ (ரலி), 100% சொத்தை நபியோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), சொத்து சுகங்களை இழந்து கபனிட கூட துணியின்றி ஷஹீதான முஸைப் (ரலி) இது போன்ற ஸஹாபாக்களை வரலாற்று ஓட்டத்தில் நாம் எங்குமே பார்க்க இயலாது. அப்படியிருக்க அவர்களோடு ஒப்பிடுவோதோ, அல்லது ஒரு சில தவறுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக குறை சொல்வதோ எப்படி சரியாகும்?
த.த.ஜ சொந்தங்களே பதில் சொல்லுங்கள்
அன்பு சகோதரன்ஃபெரோஸ்கான் (fiverose@gmail.com)
மேலே உள்ள மின்னஞ்சலுக்கு சகோதரர் அபூசுமையா அவர்கள் தான் கேட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் அளிக்கவில்லை இதற்கா பதில் சொல்ல போகிறார்கள் என்று அனுப்பிய ஆதங்க பதில் மின்னஞ்சல்.
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...அன்புச் சகோதரர் 'ஃபெரோஸ்கான்,
உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்!ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை!
1. கடலூர் முபாஹலா விஷயமாக குர்'ஆனிலிருந்து கேட்ட ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.
2. கடையநல்லூர் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்கு இழைத்த இடையூறு தொடர்பாக ஆதாரம் கேட்டதற்குப் பதிலில்லை.
3. திருவிதாங்கோட்டில் தௌஹீது பள்ளிவாசல் எங்குள்ளது என்பதற்கு இதுவரை பதிலில்லை.
4. உண்டியல் பணம் தொடர்பாக ஜாக்கின் மீது இட்டுக்கட்டி, காட்டிக்கொடுத்ததற்கு இதுவரை பதிலில்லை.
5. தொழுகையில் தொடை தெரியும் படியான ஆடை உடுத்து தொழுவதற்கான ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.
6. கேரள தௌஹீது ஜமாஅத்தினர்களான முஜாஹிதீன்கள் குறித்து அவதூறு பேசியதற்கு இதுவரை பதிலில்லை.
7. "தடம் புரண்டவர்கள் பட்டியல்" வைத்ததற்கு இதுவரை விளக்கம் இல்லை.
8. குர்'ஆன் மொழிபெயர்ப்பில் நபி(ஸல்) அவர்கள் கூறாத விஷயத்தை நபிகளின் மீது இட்டுக்கட்டி எழுதியதற்கு இதுவரை பதிலில்லை.
9. கத்தரில் சைபுல்லா ஹாஜாவிற்கு தாயி விசா அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்திற்கு இதுவரை பதிலில்லை.
10. சுனாமி கணக்கில் ததஜ சீருடை வாங்கியதை இணைத்தற்கு இதுவரை பதிலில்லை.
11. அன்னிய பெண்ணுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வது தொடர்பாக இதுவரை பதிலில்லை.
இப்படி எண்ணற்றவை அடுக்கிக் கொண்டே போகலாம்.
விவாத மன்னர்களாக பெயர் எடுத்துள்ள ததஜ இயக்கத்திற்குத் தங்களின் செயல்பாடுகள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்து கேட்கப்படுவதற்குப் பதில் இல்லாமல் போவது ஆச்சரியமான விஷயம்.
சகோதரர் அதிரை ஃபாரூக், சகோதரர் அபூ நூறா, சகோதரர் சாதிக், சகோதரர் அமீன், சகோதரர் குமரி முஸ்லிம் என எண்ணற்ற சகோதரர்கள் இணையத்தில் ததஜவுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், தங்கள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட போது அமைதி காப்பதன் அர்த்தம் ஏனோ?
இதே சம்பவம் ததஜ சகோதரர்கள் மற்றவர்கள் மீது கேள்வி கேட்டு, அவர்கள் அமைதியாக இருந்து விட்டால், "பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்ற சொல்லை எத்தனை முறை நாம் இவர்களிடமிருந்து கேட்கவேண்டி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.
"பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்பது பூமராங்காக ததஜ சகோதரர்களுக்கே திரும்ப வந்திருப்பது இறைவன் அவர்களின் தலைக்கனம், அகங்காரத்திற்குக் கொடுத்த மிகப் பெரிய அடியாக எடுத்துக் கொள்ளலாம்.
"தூய ஏகத்துவத்துக்குச் சொந்தக்காரர்கள்" என சுயமாக பட்டம் சூட்டிக் கொண்டு பெருமை அடித்துக் கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப தங்களின் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இனிமேலாவது ததஜ சகோதரர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம்.
என் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாகி ஒதுங்கி விடுவதன் மூலம், இவர்கள் அல்லாஹ்வுக்கு அல்ல, ததஜவுக்கே தக்லீது செய்கின்றனர் என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவ்வாறு அல்ல, ததஜவினர் அல்லாஹ்வுக்கு மட்டுமே தக்லீது செய்வோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை இப்போது ததஜ சகோதரர்களுக்கு இருக்கிறது.
எனவே, சகோதரர் 'ஃபெரோஸ்கானின் கேள்விகளுக்காவது விளக்கத்தோடு வருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.