*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Monday 29 June 2009

டெஹ்ரான்: ஈரான் அதிபர் தேர்தலுக்குப் பிந்தைய நிலவரம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்திருப்பது இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதற்குப் பதில் மேலும் மோசமடையவே செய்யும் என்று எச்சரித்துள்ளார் ஈரான் அதிபர் மஹமூத் அகமதிநிஜாத்.இதுகுறித்து அவர் அரசுத் தொலைக்காட்சியில் பேசுகையில், ஒபாமாவின் கருத்துக்கள் வியப்பை தருகின்றன. ஏன் எங்களது விவகாரத்தி்ல் ஒபாமா தலையிடுகிறார் என்று புரியவில்லை. மாற்றங்களை விரும்புவதாக அவர்தானே கூறி வருகிறார். பிறகு ஏன் இப்படிப் பேச வேண்டும்.ஈரானுடன் பேச்சு நடத்த தயார் என்று அவர்கள் கூறியவண்ணம் உள்ளனர். ஆனால் அப்படிக் கூறி வரும் நிலையில் ஈரானை கடுமையாக விமர்சிப்பது தேவையா. நிச்சயம் அவர்கள் தவறான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர்.
நன்றி : தட்ஸ்தமிழ்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை: இந்தியத் திருநாட்டின் தலைநகர் டெல்லியின் மெஹரெலி பகுதியில் உள்ள 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலை இடித்துத் தள்ள முயன்ற டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளையும், டெல்லி மாநில அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.பள்ளிவாசலைத் தகர்க்கும் நோக்கத்துடன் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை முற்றுகையிட்ட டெல்லி பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளும், காவல்துறையினரும் சிறுபான்மை மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பள்ளிவாசலோடு சேர்ந்த பகுதிகளைத் தகர்த்து தரைமட்டமாக்கி இருக்கிறார்கள்.டெல்லியை நவீனப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் அதிகார வர்க்கம் செய்த இந்த அடாத செயல் மன்னிக்க முடியாதது. தேசத்தின் வரலாற்று அடையாளங்களை அழிக்கும் குறுகிய மனப்பான்மை வன்மையாக கண்டிக்கத்தக்கது.திபியாவாலி பள்ளிவாசலின் தகர்க்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டித் தரப்பட்டு முஸ்லிம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் உத்தரவிட்ட அரசுகள் நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தொழுகை நடைபெற்று வந்த பள்ளிவாசல் ஒன்றை ரயில்வேத்துறை தகர்த்து தரைமட்டமாக்கியது. இந்தியத் திருநாட்டின் தலைநகரில் இத்தகைய அடாத செயல்கள் நடப்பது வேதனைக்குரியது.இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், தவறுகள் சரிசெய்யப்படாவிட்டால் காங்கிரஸ் அரசு கடும் மக்கள் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறோம்.
நன்றி : த ம ம க.

பனைக்குளம்.ஜுன்.28-
மண்டபம் ஒன்றியத்தில் த.மு.மு.க., மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஏழை – எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.கல்வி உதவித்தொகை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை கிராமத்தில் உள்ள ஏழை-எளிய மாணவ – மாணவிகளுக்கு 50 ஆயிரம் செலவில் கல்வி உதவித்தொகை மற்றும் நோட்-புக் வழக்கும் விழா நேற்று முன்தினம் வேதாளையில் நடந்தது. முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் தலைமை தாங்கினார். மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன், மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் 50 ஆயிரம் ரூ. மாணவ – மாணவிகளுக்கு நலத்திட்ட, கல்வி உதவித்தொகை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், மரைக்காயர்பட்டிணம், வேதாளை ஆகிய பகுதிகளை சேர்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் 100 ஏழை-எளிய மாணவ – மாணவிகள் பயன் அடைந்தனர்.கலந்து கொண்டவர்கள்
விழாவிற்கு த.மு.மு.க. மாவட்ட துணை தலைவர் மாயுன்கபீர், மண்டபம் ஒன்றிய ரசூல்கான், வேதாளை கிளை தலைவர் சேக் ஜமாலுதீன், ஹபிபுரகுமான் உள்பட தங்கச்சிமடம், ராமேசுவரம் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினத்தந்தி