*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Wednesday 22 July 2009

டெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நிற்க வைத்து சோதனையிட்டு அவமானப்படுத்திய அமெரிக்காவின் காண்டிடென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதற்காக இந்தியாவிடம் மன்னிப்பு கோரியுள்ளது.கடந்த ஏப்ரல் 21ம் தேதி அமெரிக்கா செல்ல டெல்லி விமான நிலையம் சென்ற கலாமுக்கு இந்த அவமானம் ஏற்பட்டது. அவரது ஷூவையும் கழற்றச் செல்லி சோதனையிட்டுள்ளனர் அந்த நிறுவன ஊழியர்கள். இதற்கு விமான நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புபப் படையான சிஐஎஸ்எப் வீரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்தபோதும் கூட இந்தச் சோதனையை அமெரிக்க ஊழியர்கள் மேற்கொண்டனர்.அப்போது மத்திய படை வீரர்களை கலாம் அமைதி்ப்படுத்திவிட்டார். ஆனாலும் கலாமுக்கு நேர்ந்த அவமானம் குறித்து சிஐஎஸ்எப், விமான போக்குவரத்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து விமானப் போக்குவரத்துத்துறை காண்டினென்டல் ஏர்லைன்சிடம் விளக்கம் கேட்டது. ஆனால், அவர்கள் பதில் தரவில்லை.இந் நிலையி்ல் இது குறித்து நேற்று தகவல் பரவியதையடுத்து நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கடும் அமளியில் இறங்கின. இதையடுத்து கலாமிடம் மன்னிப்பு கேட்பதாகவும், காண்டினென்டல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல் அறிவித்தார்.தொடர்ந்து காண்டினென்டல் நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பினார். மேலும் அப்துல் கலாமை சோதனையிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் விமான போக்குவரத்துத்துறையின் பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டது.இதையடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது விமான நிலைய போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு சோதனையில் இருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது. அதையும் மீறி சோதனை நடத்தியதால், விமான சட்டத்தின் 11(ஏ) பிரிவின்கீழ் இந்த வழக்குப் பதிவானது.இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த விமான நிறுவன ஊழியர்களுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும்.இந் நிலையில் தனது செயலுக்கு முதலில் திமிராக பதிலளித்த காண்டினென்டல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று மன்னிப்பு கேட்டுள்ளது. யாராக இருந்தாலும் சோதனை நடத்துவோம் என்று நேற்று இந்த நிறுவனம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.இந் நிலையில் தங்களது செயலுக்காக இன்று அப்துல் கலாமிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது அந்த நிறுவனம். அவரை அசிங்கப்படுத்தும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை. விதிகளைப் பின்பற்றினோம். அவ்வளவு தான். இருந்தாலும் கலாமுக்கு இதனால் ஏதாவது தொந்தரவு ஏற்பட்டிருந்தால் அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்கிறோம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
நன்றி: தட்ஸ்தமிழ்