*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Friday 3 July 2009

பர்தா என்ற மகளிரின் கவச உடை மீண்டும் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. ஆபாசத்தை வேரறுத்து மகளிரின் கண்ணியத்தைக் கட்டிக் காக்கும் பர்தா உடைக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி இல்லை என பிரெஞ்சு அதிபர் நிகலஸ் சர்க்கோஸி தெரிவித்த கருத்து உலக அளவில் பரபரப்பு தீயை பற்றவைத்தது.
2004ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் கல்விக் கூடங்களில் கூட ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்பதே பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய முஸ்லிம்களின் கடும் அதிருப்திக்கு பிரான்ஸ் இலக்கானது. ஐரோப்பியக் கண்டத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பிரான்ஸில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து தற்போது பர்தா அணியவும் அனுமதி யில்லை என்ற பிரெஞ்சு அதிபரின் திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் ஜனநாயக ஆர்வலர்களை வேதனைப்படுத் தியுள்ளது.
பொது இடங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின்படி கல்லூரிகள் மற்றும் பொதுவிழாக்களில் ஹிஜாப் அணிய முடியாது என்பதால் இதனை எதிர்த்து பிரான்ஸின் உரிமைக் காக்கும் போராளிகள் போராடி வரும் நிலையில் பர்தாவுக்கு அனுமதி இல்லை என்ற சர்க்கோஸியின் அறிவிப்பு ஆணவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகவும், இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகத்தின் வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி மார்க்க நிறுவனமான தாருல் உலூம் தேவ்பந்த், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்க்கோஸியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் அறிவிப்பினை வெளியிடத் தயாராக இருப்பதாக தாருல் உலூம் தேவ்பந்த்தின் ஃபத்வா அறிவிப்பினை வெளியிடும் தாருல் உஃபா வின் தலைவர் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவிக் கிறார். சர்க்கோஸியின் கருத்து மனித சமூகமே வெட்கப் பட வேண்டிய கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
புர்கா, நகாப், ஹிஜாப் இவையனைத்தும் பெண்களின் ஆடைகள் குறித்த அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். சர்க்கோஸி தனது சொந்த நாட்டின் சட்டத்தையும் மீறியிருக்கிறார் எனவும் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவித்திருக்கிறார்.
சர்க்கோஸி தான் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு எதிராக வும் கூட தனது கருத்தை தெரிவித்து தனது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டியுள்ளார் என்ற முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி, 'கன்னி மரியம் முக்காடிட்டதையும் அவர் என்றும் தெரிவித்தார்.
சர்க்கோஸியின் முட்டைகோசுத்தனமான கருத்து உலககெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அடிமைத்தனத்தின் சின்னமா? உளறுகிறாரா சர்க்கோஸி? என வெகுண்டெழுந்த அறிவுஜீவிகள், உலகெங்கும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான விவாத மன்றங்களை அமைத்து மூடத்தன கருத்துக்கு தெளிவான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்க்கோஸி வெறிக் கருத்து வெளியிட்ட சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஹுஸைன் ஒபாமாவால் பிரான்ஸின் உடை விஷயத்தில் பிற் போக்குத்தனத்தை செயல்படுத்துவதை கடுமையாக விமர்சித்து தனது கருத்தினை வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களின் உடைகளின் விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப் படுகின்றன. இது தேவையற்ற ஒன்று. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் சரமாரியாகத் தாக்கினார்.
பர்தா உடை விஷயத்தில் தற்போது கருத்து தெரிவிப்பது, தடை குறித்து பேசுவது எல்லாம் இப்போது உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படும் விஷயமாகி விட்டது.
பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியத் தடை இல்லை என்ற சுதந்திர உணர்ச்சிக்கு எதிரானதாக பிரெஞ்சு அதிபரின் கருத்து அமைந் துள்ளது என உலகெங்கிலும் உள்ள நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரம் (கண்க்ஷங்ழ்ற்ஹ்), சமத்துவம் (ஊவ்ன்ஹப்ண்ற்ஹ்), சகோதரத்துவம் (எங்ழ்ற்ஹய்ண்ற்ஹ்) என்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியாகவே சர்க்கோஸின் கருத்து அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
நன்றி:த ம ம க

0 Comments: