*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Sunday 19 July 2009

இடுக்கி: தமிழகத்தின் கடும் எதி்ர்பபையும் மீறி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இந்தப் பணியை துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது முல்லைப் பெரியாறு அணை உள்ளது. குமுளி-தேக்கடி அணை என்று அழைக்கப்படும் இந்த அணை தமிழக பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.ஆனால், இந்த அணை பலமிழந்துவிட்டதாக 1979ம் ஆண்டிலிருந்து கேரள அரசு புலம்ப ஆரம்பித்தது. ஆனால், மத்திய அரசுக் குழுவினர் அணையை ஆய்வு செய்தபோது அது பலமாக உள்ளது தெரியவந்தது.இருப்பினும் மத்திய நீர்வள ஆணையத்தின் ஆலோசனைப்படி பெரியாறு அணையை தமிழக அரசு ரூ.27 கோடி செலவு செய்து பலப்படுத்தியது.மேலும் அணையில் தேக்கப்படும் நீரின் அளவை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகம் திட்டமிட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்த நிலையிலும் அணை பலம் இழந்து விட்டதாகக் கூறி நீர்த் தேக்கும் அளவை உயர்த்த விடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது.இந் நிலையில் பெரியாறு அணை அருகே ரூ.300 கோடி செலவில் புதிய அணையைக் கட்டி தமிழகத்துக்கு நீரை தருவதை நிறுத்த கேரளம் திட்டம் போட்டுள்ளது.தமிழகத்தின் எதிர்பையும் நீதிமன்ற உத்தரவையும் மீறி இதற்காக தேக்கடியில் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தியது கேரளா.ஆனால், தேக்கடி வனப் பகுதியில் உள்ள பெரியார் புலிகள் சரணாலயப் பகுதியில் அணை கட்டுவதற்கான சர்வே நடத்தும் பணிக்கு மத்திய வனத் துறை தடை விதித்தது.இருப்பினும் புதிய அணை கட்டுவதற்காக 7 கி.மீ. தூரத்துக்கு சர்வேயை நடத்தியது கேரள அரசு நடத்தியது. இதில் புதிய அணைக்கான இடம், தண்ணீர் தேங்கும் பகுதி, மூழ்கும் நிலங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.இந் நிலையில், துபாயைச் சேர்ந்த மிடில் ஈஸ்ட் சர்வே அண்ட் என்ஜினியரிங் நிறுவனத்தின் பொறியாளர்கள் கேரள நீர்ப்பாசனத் துறை செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று பெரியாறு அணையை ஒட்டியுள்ள வனப் பகுதியில் புதிய அணை தொடர்பான ஆலோசனைகளை நடத்தினர்.இந்த சர்வே பணியையும் மேற்கொள்ள விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் பயன்படுத்தப்படவுள்ளவாம்.
நன்றி:தட்ஸ்தமிழ்