*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Friday 3 July 2009


நெல்லை: மதுரையில் கூஜா வெடிகுண்டுகளை பதுக்கிய வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 வக்கீல்களை தேடி வருகின்றனர்.இதுகுறித்து தென்மண்டல ஜஜி சஞ்சீவ் குமார், நெல்லை டிஐஜி கண்ணப்பன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது...நெல்லை சுத்தமல்லியில் ரவுடி மதன் உள்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான 13 பேர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து கடந்த மே முதல் மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகின்றனர்.இவர்களை பழிக்கு பழியாக தீர்த்து கட்ட மதனின் கூட்டாளிகளான பாளையங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர சுப்பிரமணியன், ஏட்டு ஒருவரின் மகன் பேச்சிமுத்து, உள்ளிட்டோர் முடிவு செய்தனர்.நெல்லை மற்றும் மதுரையை சேர்ந்த 2 வக்கீல்களின் ஆலோசனைபடி மதன் கொலையாளிகளை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல திட்டமிட்டனர்.இதற்காக பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த குட்டி என்ற சண்முகசுந்தரத்திடம் கூஜா வெடிகுண்டுகளை தயாரித்து வாங்கினர்.ஒரு குண்டை வெடிக்க செய்து பரிசோதனை செய்து பார்த்தனர். மீதமுள்ள 13 கூஜா குண்டுகளை ஹரிஹர ராமசுப்பிரமணியனின் வீட்டில் பதுக்கி வைத்தனர்.இதுபற்றிய ரகசிய தகவல் கிடைக்கவே மதுரை போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதனால் கொலை திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அந்த கும்பல் 13 கூஜா குண்டுகளை அங்குள்ள பாலத்தில் அடியில் மறைத்து வைத்துவிட்டு நெல்லை திரும்பினர்.இந்நிலையில் போலீசார் கூஜா குண்டுகளை கைப்பற்றிவிட்டனர். தங்களது திட்டம் தோல்வியடைந்து விட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் கடந்த 28ம் தேதி சுத்தமல்லியில் தொழிலாளி கசமாடனை வெட்டி கொலை செய்தது.இந்நிலையில் தனி்ப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஹரிஹர சுப்பிரமணியன், முத்துகிருஷ்ணன், வெங்கடேஷ், ஜோக்கப் ஜெயசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேஷ், லெட்சுமணன், முருகன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 7 அரிவாள்கள், துப்பாக்கி தோட்டாக்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.பேட்டியின் போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள மஞ்சுநாதா, மதுரை சரக டிஐஜி பாலசுப்பிரமணியன், நெல்லை புறநகர் எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் உடன் இருந்தனர்.குண்டர் சட்டம் பாயும் - ஐஜி எச்சரிக்கைஐஜி சஞ்சீவ் குமார் தொடர்ந்து கூறுகையில், மதுரையில் கூஜா வெடிகுண்டு சிக்கியதும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் எதிர்தரப்பை கொல்ல திட்டமிட்டு நெல்லையை சேர்ந்த சிலர் கூஜா குண்டுகளை தயாரித்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேஷிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் போலீஸ் துறைக்கு சொந்தமானவையா என விசாரணை நடக்கிறது.இச்சம்பவத்தின் பிண்ணனியில் செயல்பட்ட மற்றொரு டிஸ்மிஸ் ஆன போலீஸ்காரர் வெங்கடேஷ் உள்பட 10 பேரை தீவிரமாக தேடி வருகிறோம். வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.பட்டாசு வெடிகளை பிரித்து அவற்றில் இருந்து வெடிமருந்துகளை சேர்த்து கூஜா குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில் கூஜா குண்டுகள் மூலம் ஏற்படவிருந்த உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் பழிக்கு பழி வாங்கும் வகையில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவர்கள் குண்டர் தடை சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர் என்றார்.
நன்றி :தட்ஸ்தமிழ்


ஜித்தா : ஜித்தா இந்திய‌ன் க‌ல்சுர‌ல் காங்கிர‌ஸின் சார்பில் வினாடி வினா போட்டி ச‌மீப‌த்தில் ந‌டைபெற்ற‌து. இந்திய‌ன் க‌ல்சுர‌ல் காங்கிர‌ஸின் வெள்ளி விழாவினையொட்டி வினாடி வினா போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌.இவ்வினாடி வினா போட்டியினை ஜித்தா இந்திய‌ப் ப‌ள்ளியின் த‌லைமை ஆசிரிய‌ர் பால் ஜாய் ந‌ட‌த்தினார்.இப்போட்டியில் ஆசாத் அணியைச் சேர்ந்த‌ ஒம‌ர் அகீல் கான், ஹ‌ம்தான், ஷாஜ் முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ரிக்கா எலிச‌பெத் ஆகியோர் முத‌லிட‌ம் பெற்ற‌ன‌ர். நேரு அணியினைச் சேர்ந்த‌ ம‌ன்ஹ‌ர் முஸ‌பிர், முஹ‌ம்ம‌து ஃபாஸில், ஆமிர் இக்பால், உம‌ர் அப்துல் ஹ‌மீது உள்ளிட்டோர் இர‌ண்டாவ‌து இட‌த்தைப் பெற்ற‌ன‌ர்.குழ‌ந்தைக‌ள் பிரிவில் ஸ‌யான் ஜாஹிர் உசேன், தாலியா ஷ‌ரீப் ம‌ற்றும் ஜ‌மீல் ஆகியோர் வெற்றி பெற்ற‌ன‌ர்.இந்திய‌ன் க‌ல்சுர‌ல் காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ஷ‌ரீப் குஞ்சு போட்டியில் ப‌ங்கேற்ற‌வ‌ர்க‌ளை வ‌ர‌வேற்றுப் பேசினார். இந்திய‌ப் ப‌ள்ளி ஜித்தாவின் த‌லைவ‌ர் ச‌லாஹ் க‌ரடான் போட்டியினை துவ‌க்கி வைத்தார்.இந்திய‌ன் க‌ன்சுர‌ல் ஜென‌ர‌ல் சையித் அஹ்ம‌த் பாவா சிற‌ப்பு விருந்தின‌ராக‌க் க‌ல‌ந்து கொண்டார். அவ‌ர் போட்டி ஏற்பாட்டாள‌ர்க‌ளைப் பாராட்டினார். மாண‌வ‌ர்க‌ள‌து அறிவுத்திற‌னை ஆக்க‌பூர்வ‌ ப‌ணிக‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌கையில் இப்போட்டி ஏற்பாடு செய்திருப்ப‌த‌ற்காக‌ப் பாராட்டினார்.அத‌னைத் தொட‌ர்ந்து மாணாக்க‌ர்க‌ளின் க‌லை நிக‌ழ்ச்சி சிற‌ப்புற‌ ந‌டைபெற்ற‌து.

நன்றி :முத்துப்பேட்டை இணையதளம்

பர்தா என்ற மகளிரின் கவச உடை மீண்டும் உலக அளவில் பேசப்படும் விஷயமாக மாறியிருக்கிறது. ஆபாசத்தை வேரறுத்து மகளிரின் கண்ணியத்தைக் கட்டிக் காக்கும் பர்தா உடைக்கு பிரான்ஸ் நாட்டில் அனுமதி இல்லை என பிரெஞ்சு அதிபர் நிகலஸ் சர்க்கோஸி தெரிவித்த கருத்து உலக அளவில் பரபரப்பு தீயை பற்றவைத்தது.
2004ஆம் ஆண்டிலிருந்தே பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் கல்விக் கூடங்களில் கூட ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்பதே பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இருந்தது. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய முஸ்லிம்களின் கடும் அதிருப்திக்கு பிரான்ஸ் இலக்கானது. ஐரோப்பியக் கண்டத்தில் முஸ்லிம் அதிக அளவில் வாழும் பிரான்ஸில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து தற்போது பர்தா அணியவும் அனுமதி யில்லை என்ற பிரெஞ்சு அதிபரின் திமிர்த்தனமான பேச்சு உலகெங்கும் வாழும் ஜனநாயக ஆர்வலர்களை வேதனைப்படுத் தியுள்ளது.
பொது இடங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையின்படி கல்லூரிகள் மற்றும் பொதுவிழாக்களில் ஹிஜாப் அணிய முடியாது என்பதால் இதனை எதிர்த்து பிரான்ஸின் உரிமைக் காக்கும் போராளிகள் போராடி வரும் நிலையில் பர்தாவுக்கு அனுமதி இல்லை என்ற சர்க்கோஸியின் அறிவிப்பு ஆணவத்தின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகவும், இஸ்லாத்திற்கு எதிரான மேற்குலகத்தின் வக்கிரத்தின் வெளிப்பாடாகவும் இது கருதப்படுகிறது.
இதுகுறித்து இந்தியாவின் முன்னணி மார்க்க நிறுவனமான தாருல் உலூம் தேவ்பந்த், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சர்க்கோஸியின் கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் அறிவிப்பினை வெளியிடத் தயாராக இருப்பதாக தாருல் உலூம் தேவ்பந்த்தின் ஃபத்வா அறிவிப்பினை வெளியிடும் தாருல் உஃபா வின் தலைவர் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவிக் கிறார். சர்க்கோஸியின் கருத்து மனித சமூகமே வெட்கப் பட வேண்டிய கருத்து என்றும் அவர் தெரிவித்தார்.
புர்கா, நகாப், ஹிஜாப் இவையனைத்தும் பெண்களின் ஆடைகள் குறித்த அடிப்படை உரிமைப் பிரச்சினையாகும். சர்க்கோஸி தனது சொந்த நாட்டின் சட்டத்தையும் மீறியிருக்கிறார் எனவும் முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி தெரிவித்திருக்கிறார்.
சர்க்கோஸி தான் சார்ந்த கிறித்தவ மதத்திற்கு எதிராக வும் கூட தனது கருத்தை தெரிவித்து தனது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிக்காட்டியுள்ளார் என்ற முஃப்தி அர்ஷத் ஃபரூக்கி, 'கன்னி மரியம் முக்காடிட்டதையும் அவர் என்றும் தெரிவித்தார்.
சர்க்கோஸியின் முட்டைகோசுத்தனமான கருத்து உலககெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்தா அடிமைத்தனத்தின் சின்னமா? உளறுகிறாரா சர்க்கோஸி? என வெகுண்டெழுந்த அறிவுஜீவிகள், உலகெங்கும் இதுகுறித்து ஆக்கப்பூர்வமான விவாத மன்றங்களை அமைத்து மூடத்தன கருத்துக்கு தெளிவான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்க்கோஸி வெறிக் கருத்து வெளியிட்ட சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் ஹுஸைன் ஒபாமாவால் பிரான்ஸின் உடை விஷயத்தில் பிற் போக்குத்தனத்தை செயல்படுத்துவதை கடுமையாக விமர்சித்து தனது கருத்தினை வெளியிட்டார். பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம்களின் உடைகளின் விஷயத்தில் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப் படுகின்றன. இது தேவையற்ற ஒன்று. இது தனிநபர் சுதந்திரத்தில் தலையிடும் செயல் எனவும் சரமாரியாகத் தாக்கினார்.
பர்தா உடை விஷயத்தில் தற்போது கருத்து தெரிவிப்பது, தடை குறித்து பேசுவது எல்லாம் இப்போது உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படும் விஷயமாகி விட்டது.
பெண்கள் தாங்கள் விரும்பும் ஆடைகளை அணியத் தடை இல்லை என்ற சுதந்திர உணர்ச்சிக்கு எதிரானதாக பிரெஞ்சு அதிபரின் கருத்து அமைந் துள்ளது என உலகெங்கிலும் உள்ள நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுதந்திரம் (கண்க்ஷங்ழ்ற்ஹ்), சமத்துவம் (ஊவ்ன்ஹப்ண்ற்ஹ்), சகோதரத்துவம் (எங்ழ்ற்ஹய்ண்ற்ஹ்) என்ற பிரெஞ்சு புரட்சியின் முழக்கங்களை இழிவுபடுத்தும் முயற்சியாகவே சர்க்கோஸின் கருத்து அமைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.
நன்றி:த ம ம க