*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Thursday 9 July 2009

சர்வதேசப் பிரிவு: இங்கிலாந்தின் தேசிய ஆலோசனை சபையின் தலைவர் 'செய்யித் பரஜானி' அவர்கள், 'இஸ்லாமும், முஸ்லிம்களும் ஐரோப்பா சமூகத்தை விட்டும் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக உள்ளனர்' என்றார்.
கடந்த 7ம் திகதி செவ்வாயன்று தான் விடுத்த அறிக்கையில் செய்யித் பரஜான் அவர்கள், 'இன்று சியோனிஸ்டுக்கள், ஐரோப்பாவில் தீர்மானம் எடுக்கும் முக்கிய அமைப்புக்களில் ஊடுருவியுள்ளனர். மேல்நாடுகளில் இஸ்லாமிய வளர்ச்சி குறித்து பிழையான பிரச்சாரங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு அச்சுறுத்தி வருகின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தற்போது ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் அதிகமானோர் அடிப்படை ஐரோப்பியர். பிரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் அரசியல் உயர் பதவிகளில் முஸ்லிம்கள் அங்கம் வகிப்பதை தடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், 'இன்று மேற்கத்தியம் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக உளவியற் போரை தொடர இணைந்துள்ளது. முஸ்லிம்கள், ஒற்றுமையாக இயங்குவதன் மூலம் ஐரோப்பியருக்கு இஸ்லாத்தின் அடிப்படைப் போதனைகளை அறிமுகப்படுத்தவும், இஸ்லாம் குறித்து அவர்கள் கொண்டுள்ள பிழையான சிந்தனைகளைப் போக்கவும் இஸ்லாமிய ஆய்வு நிறுவனங்களை ஏற்படுத்துவது அவசியம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிக்கையின் இறுதியில், 'இங்கிலாந்திலும் கூட சியோனிஸ்டுகள், அரசியல் நிறுவனங்களில் ஊடுருவியுள்ளதுடன், தீர்மானம் எடுக்கும் பலத்தையும் பெற்றுள்ளதோடு இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்' என பரஜானி குறிப்பிட்டுள்ளார்.

0 Comments: