*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Friday 3 July 2009


நெல்லை: மதுரையில் கூஜா வெடிகுண்டுகளை பதுக்கிய வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 2 வக்கீல்களை தேடி வருகின்றனர்.இதுகுறித்து தென்மண்டல ஜஜி சஞ்சீவ் குமார், நெல்லை டிஐஜி கண்ணப்பன் ஆகியோர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது...நெல்லை சுத்தமல்லியில் ரவுடி மதன் உள்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான 13 பேர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து கடந்த மே முதல் மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகின்றனர்.இவர்களை பழிக்கு பழியாக தீர்த்து கட்ட மதனின் கூட்டாளிகளான பாளையங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர சுப்பிரமணியன், ஏட்டு ஒருவரின் மகன் பேச்சிமுத்து, உள்ளிட்டோர் முடிவு செய்தனர்.நெல்லை மற்றும் மதுரையை சேர்ந்த 2 வக்கீல்களின் ஆலோசனைபடி மதன் கொலையாளிகளை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல திட்டமிட்டனர்.இதற்காக பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த குட்டி என்ற சண்முகசுந்தரத்திடம் கூஜா வெடிகுண்டுகளை தயாரித்து வாங்கினர்.ஒரு குண்டை வெடிக்க செய்து பரிசோதனை செய்து பார்த்தனர். மீதமுள்ள 13 கூஜா குண்டுகளை ஹரிஹர ராமசுப்பிரமணியனின் வீட்டில் பதுக்கி வைத்தனர்.இதுபற்றிய ரகசிய தகவல் கிடைக்கவே மதுரை போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இதனால் கொலை திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அந்த கும்பல் 13 கூஜா குண்டுகளை அங்குள்ள பாலத்தில் அடியில் மறைத்து வைத்துவிட்டு நெல்லை திரும்பினர்.இந்நிலையில் போலீசார் கூஜா குண்டுகளை கைப்பற்றிவிட்டனர். தங்களது திட்டம் தோல்வியடைந்து விட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் கடந்த 28ம் தேதி சுத்தமல்லியில் தொழிலாளி கசமாடனை வெட்டி கொலை செய்தது.இந்நிலையில் தனி்ப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ஹரிஹர சுப்பிரமணியன், முத்துகிருஷ்ணன், வெங்கடேஷ், ஜோக்கப் ஜெயசீலன், ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேஷ், லெட்சுமணன், முருகன் ஆகிய 7 பேரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 7 அரிவாள்கள், துப்பாக்கி தோட்டாக்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர்கள் தெரிவித்தனர்.பேட்டியின் போது ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ள மஞ்சுநாதா, மதுரை சரக டிஐஜி பாலசுப்பிரமணியன், நெல்லை புறநகர் எஸ்பி ஆஸ்ரா கர்க் ஆகியோர் உடன் இருந்தனர்.குண்டர் சட்டம் பாயும் - ஐஜி எச்சரிக்கைஐஜி சஞ்சீவ் குமார் தொடர்ந்து கூறுகையில், மதுரையில் கூஜா வெடிகுண்டு சிக்கியதும் தீவிரவாத இயக்கங்களுக்கு தொடர்பு உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மதுரையில் எதிர்தரப்பை கொல்ல திட்டமிட்டு நெல்லையை சேர்ந்த சிலர் கூஜா குண்டுகளை தயாரித்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.ஆயுதப்படை போலீஸ்காரர் வெங்கடேஷிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் போலீஸ் துறைக்கு சொந்தமானவையா என விசாரணை நடக்கிறது.இச்சம்பவத்தின் பிண்ணனியில் செயல்பட்ட மற்றொரு டிஸ்மிஸ் ஆன போலீஸ்காரர் வெங்கடேஷ் உள்பட 10 பேரை தீவிரமாக தேடி வருகிறோம். வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.பட்டாசு வெடிகளை பிரித்து அவற்றில் இருந்து வெடிமருந்துகளை சேர்த்து கூஜா குண்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில் கூஜா குண்டுகள் மூலம் ஏற்படவிருந்த உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் பழிக்கு பழி வாங்கும் வகையில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவர்கள் குண்டர் தடை சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவர் என்றார்.
நன்றி :தட்ஸ்தமிழ்

0 Comments: