*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Sunday, 30 August 2009

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளர் நூர்முகமது படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் மகன் நூர்முகம்மது (32). இவர் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளராக உள்ளார்.இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனாஸ் (28) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு கூத்தாநல்லூரில் அவரது வீட்டிலிருந்து நூர்முகம்மது கடைவீதிக்கு சென்றார். அப்போது, எதிரில் வந்த அனாஸ்க்கும் இவருக்கும் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அனாஸ், மறைத்து வைத்திருந்த கத்தியால் நூர் முகம்மதுவை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிய நிலையில் நூர் முகம்மது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தகவலறிந்த கூத்தாநல்லூர் போலீசார் தப்பியோடிய அனாஸை வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்

Sunday, 26 July 2009

கொழும்பு: இலங்கையின் தென் பகுதியில் இரண்டு முஸ்லீம் குழுக்களிடையே ஏற்பட்ட கடும் மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒரு பள்ளி வாசல் தீவைத்து எரிக்கப்பட்டது.தென்பகுதியில் உள்ள பேருவளையில் இரண்டு முஸ்லிம் குழுக்களிடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்தது.இது நேற்று இரவு பெரும் மோதலமாக வெடித்தது. குறிப்பிட்ட ஒரு மதப்பிரிவினருக்குச் சொந்தமான பள்ளிவாசல் இன்னொரு பிரிவினரால் எரிக்கப்பட்டது.அப்போது நடந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.பேருவளைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் காணப்படுவதால் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நன்றி :தட்ஸ்தமிழ்