Wednesday, 8 July 2009
தலிபான் கருத்து-மன்னிப்பு கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதி
0 comments Posted by tmmkuk1@gmail.com at 01:11டெல்லி: முஸ்லீம் மாணவர்கள் தாடி வைத்துக் கொண்டு வகுப்புகளுக்கு செல்வதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான்மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியதற்காக சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம், விதிஷாவில் உள்ள நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் பத்தாவது வகுப்பு படித்து வந்த மாணவர் முகம்மது சலீம் என்பவர் தனது மத வழக்கத்தின்படி தாடி வைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்று கூறி பள்ளியிலிருந்து நீக்கியது.இதை எதிர்த்து முகம்மது சலீம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மார்ச் 30ம் தேதி விசாரித்தது.அப்போது மார்க்கண்டேய கட்ஜூ கூறுகையில் பள்ளி, கல்லூரி விதிகளை மீற முடியாது. தாடி வைத்துக் கொண்டு பள்ளிக்குப் போவதை அனுமதிக்க முடியாது. நாடு தலிபான் மயமாவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.இதற்கு முஸ்லீம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதற்கிடையே, மாணவர் சலீம் சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், நீதிபதி கட்ஜூ ஒருதலைபட்சமாக, பாரபட்சமாக செயல்படுகிறார். எனவே இந்த வழக்கை வேறு பெஞ்ச்சுக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் மார்ச் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்றனர்.மேலும், நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்த கருத்துக்களில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. இருப்பினும் அவரது கருத்து யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பும், வருத்தமும் கேட்டு்க கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், நீதிபதிகளில் ஒருவர் (கட்ஜூ) பாரபட்சமாக நடப்பதாக மனுதாரர் கூறியிருப்பதால் இந்த வழக்கை வேறு பெஞ்சுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்வதாகவும் ரவீந்திரன் தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
நன்றி:தட்ஸ்தமிழ்
Tuesday, 7 July 2009
சீனாவில் சீனர்கள்-முஸ்லீம்கள் பயங்கர மோதல்: 140 பேர் பலி
0 comments Posted by tmmkuk1@gmail.com at 01:46உரும்கி (சீனா): சீனாவின் வட மேற்கில் உள்ள உரும்கி என்ற பகுதியில், முஸ்லீம்களான உயிகுர் இனத்தவருக்கும், சீனர்களான ஹான் பிரிவினருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர கலவரத்தில் 140 பேர் உயிரிழந்தனர்.கடந்த பல ஆண்டுகளில் சீனாவில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரம் இது எனக் கூறப்படுகிறது. 800க்கும் மேற்பட்டோர் இதில் படுகாயமடைந்துள்ளனர்.ஜின்சியாங் உயுகுர் சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உரும்கியில், நேற்று இரவு இந்த கலவரம் நடந்தது.இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சம்பவ இடத்திலேயே 57 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் உயிரிழந்தனர்.சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது என்றார்.வட மேற்கு சீனாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ளனர். இங்கு பல்வேறு முஸ்லீம் குழுக்கள் தனி நாடு கோரி போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.அவர்களது மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதால் எப்போதும் அந்தப் பிராந்தியம் மோதல்களுடன்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போது அது பெரும் மோதலமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நன்றி: தட்ஸ்தமிழ்
