Posted by
tmmkuk1@gmail.com
at
15:07

ஜித்தா : ஜித்தா இந்தியன் கல்சுரல் காங்கிரஸின் சார்பில் வினாடி வினா போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்தியன் கல்சுரல் காங்கிரஸின் வெள்ளி விழாவினையொட்டி வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன.இவ்வினாடி வினா போட்டியினை ஜித்தா இந்தியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பால் ஜாய் நடத்தினார்.இப்போட்டியில் ஆசாத் அணியைச் சேர்ந்த ஒமர் அகீல் கான், ஹம்தான், ஷாஜ் முஹம்மது மற்றும் ரிக்கா எலிசபெத் ஆகியோர் முதலிடம் பெற்றனர். நேரு அணியினைச் சேர்ந்த மன்ஹர் முஸபிர், முஹம்மது ஃபாஸில், ஆமிர் இக்பால், உமர் அப்துல் ஹமீது உள்ளிட்டோர் இரண்டாவது இடத்தைப் பெற்றனர்.குழந்தைகள் பிரிவில் ஸயான் ஜாஹிர் உசேன், தாலியா ஷரீப் மற்றும் ஜமீல் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இந்தியன் கல்சுரல் காங்கிரஸ் தலைவர் ஷரீப் குஞ்சு போட்டியில் பங்கேற்றவர்களை வரவேற்றுப் பேசினார். இந்தியப் பள்ளி ஜித்தாவின் தலைவர் சலாஹ் கரடான் போட்டியினை துவக்கி வைத்தார்.இந்தியன் கன்சுரல் ஜெனரல் சையித் அஹ்மத் பாவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் போட்டி ஏற்பாட்டாளர்களைப் பாராட்டினார். மாணவர்களது அறிவுத்திறனை ஆக்கபூர்வ பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்திருப்பதற்காகப் பாராட்டினார்.அதனைத் தொடர்ந்து மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்றது.
நன்றி :முத்துப்பேட்டை இணையதளம்
0 Comments:
Post a Comment