Sunday, 30 August 2009
திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கூத்தாநல்லூரில் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளர் நூர்முகமது படுகொலை செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர் அப்துல்ரசாக் மகன் நூர்முகம்மது (32). இவர் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க. தொண்டரணி செயலாளராக உள்ளார்.இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனாஸ் (28) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு 8 மணிக்கு கூத்தாநல்லூரில் அவரது வீட்டிலிருந்து நூர்முகம்மது கடைவீதிக்கு சென்றார். அப்போது, எதிரில் வந்த அனாஸ்க்கும் இவருக்கும் திடீர் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த அனாஸ், மறைத்து வைத்திருந்த கத்தியால் நூர் முகம்மதுவை சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிய நிலையில் நூர் முகம்மது சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தகவலறிந்த கூத்தாநல்லூர் போலீசார் தப்பியோடிய அனாஸை வலை வீசி தேடி வருகின்றனர்.இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் கடும் பதட்டம் நிலவுகிறது.
நன்றி: தட்ஸ்தமிழ்